Latest News

December 14, 2015

வரலாற்று முக்கியத்துவமிக்க உடன்­ப­டிக்கை கைச்சாத்து அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா பாராட்டு
by admin - 0

பிரான்ஸின் பாரிஸ் நகரில் இடம்­பெற்ற உச்­சி­மா­நாட்டின் போது வரலாற்று முக்கியத்துவமிக்க உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
மேற்படி உடன்படிக்கைக்கு அமெரிக்க ஜனாதிபதி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
vivasaayi.com

இந்த உடன்­ப­டிக்­கை­யா­னது எமது பூவு­லகைப் பாது­காப்­ப­தற்­கான சிறந்த வாய்ப்­பா­க­வுள்­ள­தாக அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா தெரி­வித்தார்.
காபன் வெளி­யீ­டுகள் குறைந்த எதிர்­காலம் தொடர்­பான சவாலை உலகம் ஏற்றுக் கொள்­வ­தற்­கான முக்­கிய திருப்­ப­மாக இந்த உடன்­ப­டிக்கை உள்­ள­தாக அவர் கூறினார்.

உலகில் சுற்­றுச்­சூழல் மாசாக்­கத்தில் பெரிதும் பங்­கேற்று வரும் நாடா­க­வுள்ள சீனாவும் இந்த உடன்­ப­டிக்கை தொடர்பில் வர­வேற்­ப­ளித்­துள்­ளது. எனினும் இது பூமியை பாது­காக்கப் போது­மா­னது அல்ல என சுற்­றுச்­சூழல் தொடர்­பான பிர­சா­ர­கர்கள் தெரி­விக்­கின்­றனர்.

பாரிஸ் உச்­சி­மா­நா­டா­னது பூகோள வெப்­ப­மா­தலை 2 பாகை செல்­சி­ய­ஸுக்கும் குறை­ வாக குறைப்­பதை நோக்­காகக் கொண்­டுள்­ளது. அத்துடன் பச்சை இல்ல வாயு வெளி­யீ­டு­களை மட்­டுப்­ப­டுத்தல், ஒவ்­வொரு 5 வரு­டங்­க­ளுக்கும் ஒரு தடவை மாசு வெளி­யீ­டுகள் தொடர்­பான மதிப்­பீட்டை மேற்­கொள்ளல் 2020 ஆம் ஆண்­டுக்குள் கால­நிலை மாற் றம் தொடர்பான இலக்குகளை எட்டும் முயற்சியில் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு வருடமொன்றுக்கு 100 பில் லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கல் என்பனவற்றை மேற்படி உடன் படிக்கை உள்ளடக்கியுள்ளது

பிரான்ஸ் தலை­ந­கரில் இரு வாரங்­க­ளாக இடம்­பெற்ற மேற்­படி உச்­சி­மா­நாட்டில் சுமார் 200 நாடுகள் பங்­கேற்­றி­ருந்­தன.

இத­னை­ய­டுத்து அனைத்து நாடு­களும் மாசு வெளி­யீ­டு­களை குறைப்­பது தொடர்­பான முத­லா­வது உடன்­ப­டிக்கையில் கைச்­சாத்­தி­ட்டுள்ளன.
மேற்­படி உடன்­ப­டிக்கை குறித்து பராக் ஒபாமா மேலும் குறிப்­பி­டு­கையில், "உலகம் ஒன்­று­பட்டு நிற்கும் போது என்ன சாத்­தி­ய­மாகும் என்­பதை நாம் ஒன்­றி­ணைந்து காண்­பித்­துள்ளோம்" என்று தெரி­வித்தார்.
எனினும் மேற்­படி உடன்­ப­டிக்கை பூர­ண­மான ஒன்­றல்ல என்­பதை ஏற்­றுக்­கொள்­வ­தாக அவர் கூறினார்.
« PREV
NEXT »

No comments