Latest News

December 14, 2015

அருட்­தந்தை பிரான்ஸிஸ் முன்­னி­லையில் சர­ண­டைந்த 10 இற்கும் மேற்­பட்ட குடும்­பங்­க­ளுக்கு என்ன நடந்­த­து
by admin - 0

யுத்­தத்தின் இறுதி நாட்­களில் அருட்­தந்தை பிரான்ஸிஸ் ஜோஸப் உட்­பட
பொது­மக்கள் பலர் முன்­னி­லையில் வட்­டு­வா­கலில் வைத்து அறு­ப­துக்கும் மேற்­பட்ட விடு­தலைப் புலி உறுப்­பி­னர்கள் மற்றும் கைக்­கு­ழந்­தைகளை தாங்­கிய பத்­துக்கும் மேற்­பட்ட குடும்­பத்­தினர் இரா­ணு­வத்­தி­ன­ரிடம் சர­ண­டைந்­தனர். எனது கணவர் சுந்­தரம் பர­ம­நா­தனும் இவ்­வாறு சர­ண­டைந்­த­வர்­களில் ஒரு­வ­ராவார். தற்­போ­து­வரை அவ­ருக்கு என்ன நடந்­தது என்­பது தெரி­யா­துள்­ளது. இரா­ணு­வத்­திடம் நேர­டி­யாக ஒப்­ப­டைக்­கப்­பட்ட எனது கணவர் நிச்­சயம் உயி­ரு­டன்தான் இருக்க வேண் டும். அவர் தொடர்­பான முழு­மை­யான பொறுப்­பையும் இரா­ணு­வமே ஏற்று பதி­ல­ளிக்­க­வேண்டும். எனது கண­வரை எவ்­வா­றா­வது என்­னி­டத்தில் ஒப்­ப­டை­யுங்கள் என திரு­மதி பர­ம­நாதன் கண்ணீர் மல்க ஆணைக்­கு­ழு­விடம் கோரி­நின்றார்.

வடக்­குக்கு விஜயம் செய்­துள்ள மக்ஸ்வெல் பர­ண­கம தலை­மை­யி­லான காணமல் போன­வர்கள் தொடர்­பாக விசா­ரணை செய்யும் ஜனா­தி­ப­தியின் ஆணைக்­குழு மூன்­றா­வது நாளாக நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை ­ப­ருத்­தித்­துறை பிர­தேச செய­ல­கத்தில் அமர்­வு­களை நடத்­தி­யது. இதன்­போது சாட்­சி­ய­ம­ளிக்­கை­யி­லேயே அப்­பெண்­மணி மேற்­கண்­ட­வாறு மன்­றாட்­ட­மாக கோரினார்.
அவர் தெடர்ந்தும் சாட்­சி­ய­ம­ளிக்­கையில் முன்­ன­தாக தமி­ழீழ விடு­தலைப் புலிகள் இயக்­கத்தில் இணைந்­தி­ருந்த எனது கணவர் 1990 ஆம் ஆண்டு அவ்­வ­மைப்­பி­லி­ருந்து உத்­தி­யோ­க­பூர்­வ­மாக வில­கி­யி­ருந்தார். அதன் பின்னர் என்னை திரு­மணம் செய்தார். எமது இல்­ல­ற­வாழ்கை தொடர்ந்­து­கொண்­டி­ருந்­த­போது 2006 ஆம் ஆண்டு விடு­தலைப் புலிகள் இயக்­கத்தில் உறுப்­பி­னர்­க­ளாக இருந்­த­வர்­களை மீளவும் இணைத்­துக்­கொள்ளும் அறி­விப்பு விடுக்­கப்­பட்­டு அச்­செ­யற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. அதன்­பி­ர­காரம் எனது கணவர் மீண்டும் தமி­ழீழ விடு­தலைப் புலிகள் இயக்­கத்தில் தன்னை இணைத்­துக்­கொண்­டி­ருந்தார்.

அதனைத் தொடர்ந்த காலங்­களில் இறுதி யுத்தம் ஆரம்­ப­மா­னது. குறிப்­பாக வன்னிப் பிர­தே­சத்தில் யுத்தம் உக்­கி­ர­ம­டைந்த வேளையில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி எனது கணவர் மீண்டும் எம்­முடன் இணைந்­து­கொண்டார். இக்­கா­லப்­ப­கு­தியில் முள்­ளி­வாய்க்கால் ஊடாக வட்­டு­வாகல் கடல்­நீ­ரே­ரியைக் கடந்து பொது­மக்கள் இரா­ணு­வத்­தி­னரின் கட்­டுப்­பாட்­டுக்குள் சென்­று­கொண்­டி­ருந்­தனர். அதற்­க­மை­வாக நாமும் அவ்­வழி ஊடாக வெளி­யே­று­வ­தற்கு சென்­று­கொண்­டி­ருந்­தோம்.

இர­ணைப்­பாலைப் பிர­தே­சத்தை நாம் 17 ஆம் திகதி அடைந்­த­போது அங்கு இரா­ணு­வத்­தினர் இருந்­தனர். எம்மை அங்­குள்ள உள்ள பாட­சா­லைக்கு அழைத்­துச்­சென்­ற­வர்கள் அங்­கி­ருந்த கிணற்றில் தண்ணீர் பெற்­றுத்­தந்­தனர். அதன் பின்னர் எம்மை அழைத்­துக்­கொண்டு சென்று இரு­பு­றமும் முட்­கம்­பி­களால் அடைக்­கப்­பட்­டி­ருந்த வயல்­ப­குதி ஒன்­றுக்குள் வெளிக்குள் அடைத்து வைத்­தனர்.

முட்­கம்பி வேலிக்குள் நாங்கள் அமர்ந்­தி­ருந்­த­போ­துதான் அருட்­தந்தை பிரான்ஸிஸ் ஜோசப்பைக் கண்டோம். அவ­ருடன் உரை­யா­டினோம். அன்­றைய பொழுது நிறை­வ­டைந்­து­விட மறுநாள் 18 ஆம் திகதி காலை விடு­தலைப் புலிகள் இயக்­கத்தில் அங்­கம்­வ­கித்த அனை­வரும் சர­ண­டை­யுங்கள். நீங்கள் ஒரு நாள் அல்­லது ஒரு மாதம் அவ்­வ­மைப்பில் இருந்­தாலும் சர­ண­டை­ய­வேண்­டி­யது கட்­டாயம். உங்­க­ளுக்கு பொது மன்­னிப்பு வழங்­கப்­படும் என இரா­ணு­வத்­தினர் ஒலி­பெ­ருக்கி ஊடாக அறி­வித்­தனர்.

இரா­ணு­வத்தின் இந்த பகி­ரங்க அறி­விப்­பினை அடுத்து வயல் வெளிக்குள் முட்­கம்­பி­க­ளுக்கு மத்­தியில் அடைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த நாம் அனை­வரும் ஒன்­றி­ணைந்து அருட்­தந்தை பிரான்ஸிஸ் ஜோசப்­பிடம் என்ன செய்­வது என கேட்­­டோம். அதன்­போது விடு­த­லைப்­புலி போரா­ளிகள் உள்­ளிட்ட அனை­வ­ருக்­கு­மாக தான் இரா­ணு­வத்­துடன் பேச்­சு­வார்த்தை நடாத்­தி­விட்டு வரு­வ­தாக கூறி அருட்­தந்தை சென்றார்.

இரா­ணு­வத்­தி­ன­ரிடம் சில மணி­நே­ரம் பேச்­சு­வார்த்தை நடாத்­தி­விட்டு திரும்பி வந்­த அருட்­தந்தை விடு­தலை புலி போரா­ளி­க­ளு­டைய பெயர்கள் அடங்­கிய விப­ரங்­களை தரு­மாறு இரா­ணுவம் கோரு­கின்­றது. வழங்­கு­வோமா என எம்­மி­டத்தில் கேட்­டார்.அதன்­போது அவர்கள் பொது­மன்­னிப்பு அளிப்­ப­தாக கூறு­வதால் பட்­டி­யலை வழங்­குவோம் என நாம் தீர்­மா­னித்துடன் பெயர் விப­ரங்­களை அருட்­தந்தை ஊடாக இரா­ணு­வத்­திற்கு வழங்­கினோம்.
அத­னை­ய­டுத்து பெயர் விபரப் பட்­டி­யலின் பிர­காரம் போரா­ளிகள் அனை­வ­ரையும் இரா­ணுவம் அழைத்­துச்­சென்­றது. எனினும் சிறிது நேரத்தில் அவர்­களை மீண்டும் அந்த முட்­கம்பி பிர­தே­சத்­துக்குள் அனுப்­பி­யது. திரும்பி வந்­த­வர்கள் இரா­ணுவம் எங்­க­ளு­டைய குடும்­பங்­களை அழைத்­து­வ­ரு­மாறு கோரு­கின்­றது. ஆகவே எல்­லோரும் வாருங்கள் என்று அவ­ரவர் குடும்­பங்­களை கூட்­டிக்­கொண்டு இரா­ணு­வத்­தி­ன­ரிடம் சென்­றார்கள் .

அங்­கி­ருந்த பத்­திற்கும் மேற்­பட்ட குடும்­பத்தி­னர் தமது சிறு கைக்­கு­ழந்­தை­க­ளுடன் இரா­ணு­வத்­திடம் சர­ண­டைந்­தார்கள். அதே போன்று குடும்ப உறுப்­பி­னர்கள் யாரு­மில்­லாது அறு­ப­துக்கும் மேற்­பட்ட விடு­தலைப் புலி போரா­ளி­களும் இரா­ணு­வத்­திடம் சர­ண­ட­டைந்­தார்கள்.

எனக்கு பெண் பிள்­ளைகள் இருந்த கார­ணத்­தினால் எனது கணவர் என்னை அழைத்­துச்­செல்ல விரும்­ப­வில்லை. இதனால் நான் முட்­கம்பி பிர­தே­சத்­திற்­குள்­ளேயே நின்­றி­ருந்தேன். எனினும் கணவர் இரா­ணு­வத்­திடம் சர­ண­டை­வ­தாக கூறினார். நான் விசா­ரணை முடிந்து வந்­து­வி­டு­கிறேன் நீங்கள் உங்கள் அம்மா விட்­டிற்கு சென்று தங்­கி­யி­ருங்கள் எனக் கூறி­விட்டு சென்றார். அதன்­போது அவ­ரு­டைய தேசிய அடை­யாள அட்­டை­யி­னையும், ஒரு தொகை பணத்­தி­னையும் நான் வழங்­கினேன். மறுநாள் காலை 9 மணி­ய­ளவில் சர­ண­டைந்த அனை­வ­ரையும் இரா­ணுவம் பஸ் வண்­டி­களில் ஏற்­றி­யது. சுமார் 12 மணி­ய­ளவில் அப்­ப­கு­தி­யி­லி­ருந்து அனைத்து பஸ்களும் புறப்­பட்டுச் சென்­றன. அதி­க­ள­வான பஸ் வண்­டிகள் அங்கு நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த கார­ணத்­தினால் எனது கணவர் எந்த பஸ்ஸில் ஏற்­றப்­பட்டார் என்­பதை என்னால் அடை­யாளம் கண்­டி­ருக்­க­மு­டி­ய­வில்லை.
இதன்­போது இரண்டு முக்­கிய சம்­ப­வங்கள் நிகழ்ந்­தன. பஸ்கள் ஒவ்­வொன்­றாக புறப்­பட்ட போது தமி­ழீழ விடுலைப் புலிகள் இயக்­கத்தின் யாழ்.மாவட்ட அர­சியல் துறை பொறுப்­பா­ளா­ராக செயற்­பட்ட இளம்­ப­ரு­தியின் தாயார் திடீ­ரென புறப்­பட்ட பஸ் ஒன்­றி­லி­ருந்து இறங்கி வந்தார். அவர் நாங்கள் இருந்த முட்­கம்பி பகு­திக்குள் நேராக வந்து எங்­க­ளுடன் அமர்ந்­து­விட்டார். அதே­போன்று எனது கண­வ­ருடன் ஒன்­றாகச் சென்ற ஆனந்த குமா­ர­சாமி என்­பவர் தனது மனை­வியின் தொலை­பேசி இலக்­கத்­தினை என்­னி­டத்தில் வழங்கி தான் சர­ண­டைந்த தக­வலை மனை­வி­யிடம் அறி­விக்­கு­மாறு கேட்­டுச்­சென்­றி­ருந்தார்.

அதன் பின்னர் நாங்­கள் வவுனியாவில் அமைக்கப்பட்டிருந்த இடைத்தங்கல் முகாமிற்கு சென்றுவிட்டோம். அன்றைய தினம் எனது கணவருடன் இராணுவத்திடம் சரணடைந்த எந்தவொரு நபரினதும் தகவல்கள் இதுவரையில் தெரியாதுள்ளன. அருட்தந்தை மற்றும் பெரும் தொகையான பொது மக்கள் முன்னிலையிலேயே எனது கணவர் உள்ளிட்ட பெரும்தொகையானவர்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். இதற்கு அவர்களே நேரில் கண்ட சாட்சிகளாக உள்ளனர். 

சரணடைந்த எனது கணவர் உயிருடன்தான் இருக்க வேண்டும். என்ற நம்பிக்கை எனக்கு தற்போதும் உள்ளது .எனது கணவருக்கு என்ன நடந்தது என்பதை இராணுவமே கூறவேண்டும். அவர்களே அதற்கு பொறுப்பானவர்கள். தயவுசெய்து அவரை இராணுவத்தினரிடமிருந்து மீட்டுத் தாருங்கள். என கண்ணீருடன் ஆணைக்குழு முன்னிலையில் கோரிக்கை விடுத்தார்.
« PREV
NEXT »

No comments