தலைவரை அகற்ற நினைத்த ஜெனரலை,
கொழும்பில் வைத்து அகற்றிய தலைவர்..!
ஈழத்து துரோணர்...!!!
1988ம் ஆண்டு இலங்கையின் ஜனாதிபதியாக ரணசிங்க பிரேமதாச ஆட்சியை கைப்பற்றியதும், அவருக்கு பக்கத்துணையாக இருந்த இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றுருந்த லெப். ஜெனரல். ரஞ்சன் விஜையரட்னாவை பாதுகாப்பு அமைச்சராக நியமித்தார்.
அதற்கு முக்கிய காரணம் அந்த நேரத்தில் கொழும்பில் ஆட்சியை கைப்பற்றுவதற்கு JVP என்னும் கெரிலா அமைப்பு, சிங்கள இளைஞர்களைத் திரட்டி ஆயுதப் போராட்டத்தில் குதித்திருந்தது. வடக்கில் தமிழர்களாலும், கிழக்கில் சிங்கள இளைஞர்களாலும், சிங்கள அரசு நெருக்கடியைச் சந்தித்திருந்தது.
அந்த நேரத்தில் இந்திய இராணுவத்திற்கும், புலிகளுக்கும் சண்டை நடந்து கொண்டிருந்தமையால், புலிகளின் கவனம் அதிலேயே இருந்தது. அதனால் பிரேமதாசவின் கவனம் JVP இன் பக்கம் திரும்பியது. ஆட்சி அமைத்ததும் ரஞ்சன் விஜையரட்னாவின் பனிப்பின் பெயரில் "கொலகொட்டி" (பச்சைப்புலிகள்) என்னும் கொலைப்படையொன்று உருவாக்கப் பட்டது.
அந்தப் படையணி JVP இன் உறுப்பினர்களை மட்டுமல்ல, அவர்கள் குடும்பத்தை கூட விட்டுவைக்க வில்லை. 1988,1989 காலப்பகுதிகளில் வெள்ளைவானில் வரும் இந்த படையணியினரால் பெண்கள்,குழந்தைகள் என்னும் பாகுபாடின்றி கொன்று குவித்து வீதியோரங்களில் எரியூட்டப் பட்டனர். பலநூறு பேர் சுட்டுக்கொன்றபின் களனியாற்றில் வீசப்பட்டனர்.
அன்றைய நேரத்தில் இவர்களால் சிங்கள மக்களின் இரத்தம் ஆறாக ஓடியது. இவர்களின் சொந்த மக்களுக்கான நரவேட்டையின் பின் JVP இன் கிளர்ச்சி துப்பாக்கி முனையால் அடக்கப் பட்டது. இந்த வெற்றி இவர்களுக்கு ஒரு வித உச்சாகத்தை கொடுத்திருந்தது. அதனால் 1990களில் புலிகளுடன் சண்டையை ஆரம்பிக்கும் நோக்கில் அத்துமீறல்களை செய்து சண்டையை ஆரம்பித்தனர்.
இந்த காலப்பகுதியில் யாழில் வைத்து இராணுவ உளவாளி ஒருவனை, புலிகளின் உளவுத்துறையை சேர்ந்தவர்களால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப் பட்டபோது திடுக்கிடும் தகவல் ஒன்று அவனிடம் இருந்து பெறப்பட்டது.
அதாவது அந்த காலகட்டத்தில் அண்ணை (தலைவர்) கொக்குவில் பகுதியில் இருந்தார். அப்போதெல்லாம் வெள்ளிக்கிழமைகளில் அண்ணி அவர்கள் (மதிவதனி) நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு சென்றுவருவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்த தகவலைப் எப்படியோ பெற்றுவிட்ட சிங்கள உளவுத்துறையினர், ரஞ்சன் விஜையரட்னாவின் நேரடி ஆலோசனையின் பேரில் தமிழ் உளவாளி ஒருவனை தயார் படுத்தி அனுப்பியிருந்தனர்.
அவன் மூலமாக அண்ணியை பின் தொடர்ந்து, அண்ணி மூலமாக, அண்ணையின் இருப்பிடத்தை இனம் கண்டு பெரும் விமானத்தாக்குதல் மூலம் அவரை அகற்றும் முடிவை எடுத்து தமது உளவாளிகளை முடுக்கி விட்டிருந்தனர். அந்த உளவாளிகளில் ஒருவனே கைது செய்யப்பட்டு புலிகளால் தகவல் பெறப்பட்டது.
புலிகளின் உளவுத்துறையினர், களத்தில் இறக்கி விடப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக அந்த நடவடிக்கைக்காகயில் ஈடு பட்டிருந்த இராணுவ உளவாளிகள் அனைவரும் கைது செய்யப் பட்டனர். தமிழரின் தலைமையை அழிக்கும் முடிவை, சிங்களம் எடுத்ததை புலிகளால் ஜீரணிக்க முடியவில்லை. அவர்களால் இது போன்ற இன்னொரு முயற்சி எடுப்பதற்கு முன்னர், அவர்கள் தலைமையை அகற்றும் முடிவை புலிகள் எடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து புலிகளின் உளவுச்செயற்ப்பாடும் வேகம் பெற்றது. சிங்கள தலைநகரில் இந்த சதியின் மூளையாக செயல்ப்பட்ட ரஞ்சன் விஜையரட்னாவை குறிவைத்து அலைந்து திரிந்தனர் புலிகள். ஒருவாறு இலக்கு இனம் காணப்பட்டதும், அவரது நடமாட்டங்கள் தொடர்ந்து கண்காணிக்கப் பட்டது.
குறித்த நேரத்தில் காலை தனது அலுவலகத்திற்கு சென்றுவிட்டு, குழப்பமான நேரங்களில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். இதனால் காலை நேரத்தில் தாக்குதல் நடத்துவதென தாக்குதல் அணியினர் தெரிவு செய்தனர். கிழமை நாட்களின் சன நடமாட்டங்கள் அதிகம் என்பதால் சனிக்கிழமையை தெரிவு செய்த புலிகள் அதன்படி தாக்குதலுக்கான இடத்தையும் தெரிவு செய்தபின் காரொன்றில் குண்டைப் பொருத்தி வெடிக்க வைப்பதென தீர்மானித்தனர்.
புலிகள் வாகனத்தில் ஒரு பக்கத்தில் முழு வெடிமருந்தையும் நிரப்பி இருந்தனர். ஏனெனில் அந்தப் பக்கத்தை இலக்கு கடந்து செல்லும் போது மிகப் பெரும் சேதத்தை அது உண்டுபண்ணும் என்பதை புலிகள் கணித்திருந்தனர். திட்டத்தின் படி கட்சிதமாக எல்லாம் தயார்நிலையில் இருந்தது.
ஆம், அந்த நாளும் வந்தது 02/03/1991அன்று காலை 8மணிபோல் குண்டு பொருத்திய காரில் அந்த கரும்புலி வீரனும் அவனை வழியனுப்புவதற்கு, குறிப்பிட்ட தூரம் வரை வரதனும் (பிறிதொரு சம்பவத்தில் சயனைட் அருந்தி வீரச்சாவடைந்து விட்டார் ) சென்றிருந்தார். குறிப்பிட்ட தூரத்தில் வரதன் இறங்கி சென்றுவிட அந்த கரும்புலி வீரன் தனது இலக்கிற்காக கொழும்பு 5, போலீஸ் பார்க் அருகே காத்திருந்தான்.
அவன் எதிர் பார்த்தது போல தனது குண்டு துளைக்காத பாதுகாப்பு கூடிய பென்ஸ் காரில், சிறப்பு பாதுக்கப்பு படைவீரர்கள் லான்றோவர் வாகனத்தில் பின் தொடர வந்து கொண்டிருந்தனர். வீதியோரத்தில் இவர்களுக்காக காத்திருந்த குண்டு பொருத்தப் பட்ட கார் காலை 8.30மணி போல் வெடித்துச் சிதறியது. சிங்களத்தலைநகரே அதிர்ந்து போனது.
துல்லியமான தாக்குதல். ரஞ்சன் விஜையரட்னாவும், அவரது பாதுகாப்பிற்கு வந்த ஐந்து அதிரடிப்படை வீரரும் அவ்விடத்திலேயே கொல்லப்பட்டனர். அவரது இறப்பின் பின், பிரேமதாச அரசு "ஜெனரலாக. " பதவி உயர்வு வழங்கி அவரை கெளரவித்திருந்தது.
தமிழர் மட்டுமல்லாது சிங்களவரும் இந்த வெற்றியை கொண்டாடி இருப்பார். தலைவர் அடிக்கடி சொல்லு ஒரு கருத்து "முத்துபவன் வெல்வான் " அன்று அது உண்மையானது. துன்பத்தை தரமுயன்றவனுக்கே, தமிழரால் அந்த துன்பம் வழங்கப் பட்டது. அவர்கள் செய்ய நினைத்ததை புலிகள் கொழும்பில் செய்தனர். புலனாய்விலும் புலிகள் உச்சம் பெற்றனர்....நினைவுகளுடன் துரோணர்..!!
1 comment
குறித்த படத்தில் கொல்லப்பட்டவர் பாராளுமன்ற உறுப்பினர் கலநிதி நீலன் திருச்செல்வம்!
Post a Comment