Latest News

September 26, 2015

ரஜினியை முந்தி தமிழ் சினிமாவில் சாதித்த விஜய்!
by admin - 0

சிம்புதேவன் இயக்கி இளையதளபதி விஜய் நடித்த ‘புலி’ அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகவுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 10க்கும் மேற்பட்ட நாடுகளில் 3,000 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
www.vivasaayi.com

இந்நிலையில் தமிழ் சினிமாவை உலகளவில் கொண்டு சென்றவர் ரஜினிகாந்த். இவரின் சாதனைகளை இவரே முறியடித்து வந்தார். ரஜினி நடித்த ‘சிவாஜி’, ‘எந்திரன்’, ‘கோச்சடையான்’, ‘லிங்கா’ ஆகிய படங்கள்தான் அமெரிக்காவில் அதிக திரையரங்குகளில் வெளியானது. ஆனால் தற்போது ‘புலி’ 100க்கும் மேற்பட்ட அரங்குகளில் வெளியாகிறது.

மேலும் கனடாவில் ரஜினியின் ‘கோச்சடையான்’ 16 அரங்குகளில் வெளியானது. இதுவே தமிழ் சினிமாவின் அதிக எண்ணிக்கையாக அங்கு இருந்தது. தற்போது ‘புலி’ 18 அரங்குகளில் வெளியாகவுள்ளதால் இது முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. பிரிட்டனில் 60க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

மேலும் சென்னை, மாயாஜாலில் உள்ள அரங்குகளில் தினமும் 50 காட்சிகளுக்கு புக்கிங் நடைபெற்று வருகிறது. தற்போதுவரை சென்னையில் வெளியாகவுள்ள அரங்குகள் ஒரு வாரத்திற்கு புக்காகி விட்டதாம். மேலும் விஜய் படங்களில் இதுவரை இல்லாத அளவு இப்படத்தின் வியாபாரம் உயர்ந்துள்ளது கவனித்தக்கது.

இப்படத்தின் சென்னை சிட்டி உரிமை ரூ.7.15 கோடிக்கும், செங்கல்பட்டு ரூ.8 கோடிக்கும், மதுரை ரூ.6 கோடிக்கும்,திருநெல்வேலி, கன்னியாகுமரி ரூ.3.25 கோடிக்கும், திருச்சி ரூ.4.50 கோடிக்கும், சேலம் ரூ.3.5 கோடிக்கும், NSCஏரியா ரூ.6 கோடிக்கும் என தமிழகத்தின் வெளியீட்டு உரிமை மட்டுமே சுமார் ரூ.40 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாககூறப்படுகிறது. மேலும் வெளிநாட்டு உரிமை, சாட்டிலைட் என ‘புலி’யின் மொத்த வியாபாரம் சுமார் 100 கோடியை தாண்டிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘புலி’யின் மொத்த பட்ஜெட் ரூ 118 கோடி என கூறப்படுகிறது. இன்னும் படம் வெளியாக ஐந்து நாட்கள் உள்ளதால் இதர வியாபாரங்களும் சூடு பிடிக்கும் எனத் தெரிகிறது. இதனால் தங்கள் முதலீட்டை படம் வெளியாவதற்கு முன்பே தயாரிப்பாளர்கள் எடுத்துவிடுவார்கள் எனத் தெரிகிறது.

இவையெல்லாம் ஒருபுறம் இருக்க படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால் படத்தின் உரிமை அதிக விலைக்கு விற்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும் விநியோகஸ்தர்கள் அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளதால் தியேட்டரில் டிக்கெட்களும் அதிக விலைக்கு விற்கப்பட்டு வருகிறது. இதனால் அதிக தொகைக்கு டிக்கெட் விற்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒருபுறம் கோரிக்கைஎழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments