Latest News

September 26, 2015

யாழ்ப்பாண் மாநகர சபையின் டெங்கு நுளம்பு பரிசோதனையிலும் இராணுவத்தினர் தலையிடு தொடர்பில் மக்கள் அதிருப்தி
by admin - 0

டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை பரிசோதனை செய்யும் சுகாதார பிரிவினருடன் இராணுவத்த்தினர் வருகை தருவதற்கு தாம் அனுமதியளிக்கவில்லை என யாழ்.மாநகர சபையின் ஆணையாளர் வாகீசன் தெரிவித்தார்.

டெங்கு நுளம்பு பெருக்கம் குறித்து வீடுகளிற்கு பரிசோதனை மேற்கொள்ள வரும் சுகாதார பிரிவினருடன் இராணுவத்தினரும் வருவது குறித்து கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அன்மைக்காலமாக யாழ்.மாநகர சபைக்குட்பட இடங்களில் மாநகர சபையின் சுகாதார பிரிவை சேர்ந்தவர்கள் டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் குறித்து பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பரிசோதனைகள் வீடுகள், கடைகள் வெற்று காணிகள் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகின்றறது. மேற்படி இடங்களுக்கு நேரில் சென்றே சுகாதார பிரிவினர் பரிசோதனைகளை மேற்கொண்டும் வருகின்றனர்.

இவ்வாறு வீடுகளுக்கு பரிசோதனைகளுக்கு செல்லும் சுகாதார பிரிவினரோடு பொலிசாரும் கிராம சேவகர் அலுவலகத்தை சார்ந்தோரும் சென்று வருகின்றனர். இவர்களுடன் படைத்தரப்பை சேர்ந்த இராணுவத்தினரும் சென்று வருகினறனர். தமது வீடுகளுக்கு இராணுவத்தினர் வருவது குறித்து பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

பொது மக்களின் அதிர்ப்தி குறித்து ஆணையாளரிடம் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார், 
தற்போது டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் குறித்து பரிசோதனைகள் யாழ்.மாநகர சபையின் சுகாதார பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு பரிசோதனைகளுக்கு செல்பவர்களில் யாழ்.மாநகர சபையின் பணியாளர்களும் பொலிசாருமே சென்று வருவதாக எமக்கு உத்தியோக பூர்வமாக அறியத்தரப்பட்டது.

இவர்களுடன் இராணுவத்தினர் செல்வது குறித்து எமக்கு எதுவும் தெரியப்படுத் தவில்லை. நாமும் அனுமதிக்கவும் இல்லை. என்றார் ஆணையாளர். மேலும் டெங்கு நுளம்பினை கட்டுப்படுத்தும் நோக்கில் யாழ்.மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பல இடங்களில் எமது சுகாதார பிரிவினரால் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வறிகின்றன.
டெங்கு நுளம்பு பரவும் வகையில் தமது காணிகளை வைத்திருக்கும் வீட்டு உரிமையாளர்கள் மீதும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. 

நல்லூர், வண்ணார்பண்ணை, யாழ்.நகரப்பகுதி போன்ற இடங்களிலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments