Latest News

September 23, 2015

இலங்கை,இந்திய அரசுகள் தமிழக தமிழீழ மக்களை மோதவிட சதி -மக்கள் போராட்டம்
by admin - 0

இலங்கையின் வடபகுதி கடற்பரப்பிற்குள் அத்துமீறி தொழில் நடவடிக்கைகயளில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களைக் கண்டித்தும் அதனைத் தடுத்து நிறுத்தக் கோரியும் வடமாகாண கடற்தொழிலாளர் அமைப்புக்கள் இணைந்து இன்று யாழில் மாபெரும் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கை, இந்திய அரசுகளே ஈழத் தமிழர்களையும் தமிழக உறவுகளையும் மோதவிட்டு எம்மைப் பிரித்து விட வேண்டுமென்று நினைக்காதே எமது பிரச்சனையைத் சுமூகமாகத் தீர்த்து வைப்பதற்குரிய நடவடிக்கைகளை மெற்கொள் இதுவெ எமது கோரிக்கை என்றும் வலியுறுத்தினர்.

கடந்த சில வருடங்களாக வடபகுதி கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வட பகுதியின் கடல் வளம் பெரிதும் அழிக்கப்படுவதுடன்தொழிலாளர்களும்  பல்வெறு பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர்

இந்நிலையில் இது தொடர்பில் பல தரப்பினரல்களுக்குத் தெரியப்படுத்தியும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை பல பேச்சுக்கள் நடத்தியும் முடிவுகள் எட்டப்படவில்லை. இந்நிலையில் வடக்கிலுள்ள கடற்தொழில் அமைப்புக்கள் பலவும் இணைஒந்து இன்று யாழில் போராட்டத்தில் ஈடுபட்டன.

இன்று காலை யாழ் நிரீயல் வளத் திணைக்களத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பேரணி யாழ் நகரைச் சுற்றி யாழ் மாவட்ச் செயலகத்திற்குச் சென்று யாழ் அரச அதிபரிடம் மகஐரொன்றையும் கையளித்தனர்.

இதனைத் தொடர்ந்து அங்கிருந்து யாழிலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்திற்குச் சென்று தூதுவர் நடராஐனிடம் மகஐரொன்றையுமு; கையளித்ததுடன் தமது ஆதங்கங்களையும் வெளிப்படுத்துp கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.

அதாவது ஈழத்தமிழ் மக்களையும் எமது உறவுகளான தமிழக தமிழ் மக்களையும் மோதவிட்டு வேடிக்கை பாரக்க வேண்டாம், எமது பிரச்சனைகளை சுமூகமாகத் தீர்த்து வையுங்கள், இல்லையேல் கடலிலெயெ எமக்கிடையே யுத்தம் ஏற்படலாம், அதனை தவிர்க்கவே நாம் விரும்புகின்றோம். எனவே உறவுகளைப் பிரிக்காது சுமூகமான தீர்வை ஏற்படுத்திக் கொடுங்கள் இல்லையேல் பாரியளவிலான போராட்டங்களை இங்கும் மேற்கொள்வொம் என்றும் கூறினர்.












« PREV
NEXT »

No comments