Latest News

September 23, 2015

சிறுமியர் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைக் கண்டித்து முல்லைத்தீவில் கண்டனப் பேரணி
by admin - 0

சிறுமியர் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைக் கண்டித்து முல்லைத்தீவில் கண்டனப் பேரணி 



சிறுமியர் பெண்குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், பால் நிலை வன்கொடுமைகளைக் கண்டித்தும், வித்தியா, ஜெருஷா, சேயா போன்ற வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமியர்களுக்கு நீதி கோரியும், பெண்கள் சிறுமியர்களுக்கான பாதுகாப்பை வேண்டியும் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு கண்டனப் பேரணியொன்று இன்று நடத்தப்பட்டது,

முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் அபிவிருத்தி மற்றும் புனர்வாழ்வு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாவட்டத்தின் பல்வேறு பெண்கள் அமைப்புக்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் தாய்மார் மற்றும் பெண்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

முல்லைத்தீவு மாவட்டத்திலும் அண்மைய வாரங்களில் இத்தகைய பாலியல் வன்முறைகள் இடம்பெற்றதாக சுட்டிக்காட்டியுள்ள பெண்கள் அமைப்பினர், மாவட்டத்தில் அரச மற்றும் தனியார் துறை அலுவலகங்கள் வேலைத் தளங்கள்ஈ கிராமப்புறங்கள் நகர்ப்புறங்களிலும் பெண்களினதும் சிறுமியர்களினதும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனக் கோரியும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்ளையும் கையளித்துள்ளனர். 





« PREV
NEXT »

No comments