சர்வதேச விசாரணையை வலியுறுத்தி திரட்டப்பட்ட கையொப்பங்கள் ஐ.நா அதிகாரிகளிடம் தமிழர் செயற்பாட்டுக் குழுவினரால் கையளிக்கப்பட்டது.
இலங்கையில் இடம்பெற்ற சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள் தொடர்பில் விசாரணை நடாத்துவதற்கு சர்வதேச குற்றவியல் விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்படல் வேண்டும் எனவும்
ஸ்ரீலங்கா அரசினால் உருவாக்கப்படும் எந்தவொரு உள்ளகப் பொறிமுறையையும் ஏற்றுக் கொள்ள முடியாதெனவும் வெளிப்படுத்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளுக்கும் அனுப்புவதற்காக திரட்டப்பட்ட கையொப்பங்களின் மூலப் பிரதிகள் இன்று கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் உள்ள மனித உரிமைகளுக்கு பொறுப்பான அதிகாரியான பிரடீப் வாலே என்பவரிடம் கையளிக்கப்பட்டது.
மேற்படி கையொப்பங்களின் மூலப் பிரதிகள் சர்வதேச பொறுப்புக் கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டுக் குழுவின் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அலன் சத்தியதாஸ் மற்றும் சட்டத்தரணி விவேகானந்தன் புவிதரன் ஆகியோர் நேரில் சென்று கையளித்திருந்தனர்.
மேற்படி கையளிப்பு நிகழ்வு இன்று பிற்பகல் இடம்பெற்றது.
No comments
Post a Comment