இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான கலப்பு நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க தயாராக இருப்பதாக முன்னாள் ராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
போருக்குத் தலைமை தாங்கிய ராணுவத் தளபதி என்ற வகையில் எந்தவொரு நீதிமன்றத்திலும் சாட்சியமளிக்க தான் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2010ம் ஆண்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களை படுகொலை செய்ய கோத்தாபய உத்தரவிட்டிருந்ததாக சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார். அத்துடன் இரத்தினபுரி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றிலும் அந்தக் கருத்தை அவர் வலியுறுத்தியிருந்தார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையத்தின் போர்க்குற்றங்கள் தொடர்பான அறிக்கையில் வெள்ளைக்கொடி விவகாரம் முக்கிய இடத்தைப்பெற்றுள்ளது.
இந்நிலையில் கலப்பு நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கவுள்ள சரத் பொன்சேகா, வெள்ளைக்கொடி விவகாரத்தில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை மாட்டிவிடுவாரா என்ற பெரும் எதிர்பார்ப்பு ஊடக வட்டாரங்களில் ஏற்பட்டுள்ளது

No comments
Post a Comment