Latest News

August 07, 2015

கூட்டமைப்புடன் இணைந்த கருணா-தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு
by admin - 0

மட்டக்களப்பில் மக்கள் கூட்டமைப்புக்கு வாக்களிக்கவேண்டும் என கூட்டமைப்பு பக்கம் சாய்ந்த கருணா தெரிவித்துள்ளார் 


தேசிய கட்சிகளுக்கு வாக்களித்து மாற்றுத்தலைவர்களை உருவாக்காமல் தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கே வாக்களிக்கவேண்டும் என முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.(தமிழின துரோகி கருணா)


இது தொடர்பில் அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


நடைபெறப்போகும் தேர்தல் தமிழ் மக்களுக்கு முக்கியமான தேர்தலாகும்.எமது உரிமைகளை நிலைநிறுத்துவதற்கு மீண்டும் ஒருவாய்ப்புக்கிடைத்துள்ளது.இதில் நாங்கள் சுயநலம்பாராது சிந்திக்கவேண்டும்.

மட்டக்களப்பு மக்களாகிய நாம் விழிப்பாக இருக்கவேண்டும்.கடந்த பத்து வருடமாக என்னை அர்ப்பணித்து உங்களுக்கு சேவையாற்றியுள்ளேன்.
குறிப்பாக மின்சார தேவை குறிப்பிடத்தக்க அளவு பூர்த்திசெய்யப்பட்டுள்ளது.கல்வியில் பாரிய அபிவிருத்தினை கண்டுள்ளோம்.சுகாதாரம் மேம்பட்ட நிலையில் இருப்பதுடன் கணிசமான வீடுகள் தேவையினையும் பூர்த்திசெய்துள்ளோம். அதேபோன்று குடிநீர்ப்பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது, விவசாய மேம்பாடு, குளங்கள் புனரமைப்பு என பல அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மண்முனைப்பாலத்தினையும் எனது காலத்தில் எனது முயற்சியினால் அமைத்துக்கொடுத்துள்ளதுடன் அதன் மூலம் படுவான்கரை பிரதேச மக்கள் மிகுந்த நன்மையடைந்துவருகின்றனர்.

இதற்கு மேலாக இந்த நாட்டில் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்காக நிரந்தர அமைதியை ஏற்படுத்தி தந்துள்ளேன்.இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்ட காலப்பகுதியில் இரவு பகல் பாராது பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டு தேவையான உதவிகளை வழங்கியிருந்தேன்.

என்மீது தமிழ் மக்கள் தனிப்பட்ட ரீதியில் அன்பும் மரியாதையும் கொண்டுள்ளார்கள் என்பது எனக்கு தெரியும்.அதனால் நான் உங்களிடம் உரிமையுடன் இந்த விடயத்தினை கோருகின்றேன்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களாகிய நாங்கள் தேசிய கட்சிக்களுக்கு வாக்களித்து மாற்றுத்தலைவர்களை உருவாக்காமல் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்குமாறு உங்களை அன்பாக கேட்டுக்கொள்கிறேன்.அதுமட்டுமன்றி புதிய உறுப்பினர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பில் பாராளுமன்றம் அனுப்பிவைக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

என்னை தேசிய கட்சிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட அழைப்புகளை விடுத்திருந்தபோதிலும் அந்த அழைப்புகளை நான் நிராகரித்துவிட்டேன்.மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்தவரையில் கடந்த காலத்தில் நாங்கள் தேசிய கட்சிக்கு அளித்த வாக்குகளினால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையினையும் பெற்றுக்கொடுக்கவில்லை.மாறாக அது வேறு ஒரு சாராரைமட்டுமே நன்மையடைச்செய்தது.

அதன் காரணமாகவே நான் தேசிய கட்சிகளில் போட்டியிடுவதை தவிர்த்துக்கொண்டேன்.தற்போதைய நிலைமையானது தமிழ் மக்களுக்கு மிகவும் முக்கியத்துவமிக்க காலமாகும்.நாங்கள் பிரித்து வாக்களிப்போமானால் அது தேசிய கட்சிகளுக்கே சாதகமாக அமையும்.
எனவே தமிழ் மக்கள் பிரிந்துநின்று வாக்களிக்காமல் ஒன்று சேர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்கவேண்டும்.அதிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் புதிய உறுப்பினர்களை பாராளுமன்றம் அனுப்பும்போது அது சிறந்த பலனைப்பெற்றுக்கொடுக்கும் என்றார்.


அத்துடன்கூட்டமைப்புக்கு கிடைக்கும் தேசிய பட்டியளை  கருணா அவர்களுக்கு அளிக்க இரகசியமாக திட்டம் இருப்பதாகவும் அதனாலே கருணா கூட்டமைப்புக்கு ஆதரவு என அறிக்கை விட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன   

« PREV
NEXT »

No comments