Latest News

June 20, 2015

மஹிந்த பிரதமரானால் மைத்திரியை கொன்று ஜனாதிபதியாவார்!
by admin - 0

ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குமிடையே இரகசிய நட்பு தொடர்வதாகவும் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஷவை களமிறக்குவதற்கான முயற்சிகள் திரைமறைவில் முன்னெடுக்கப்படுவதாகவும் கூறப்படும் செய்திகள் வெறும் புரளியாகுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார். இதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிடம் உறுதி செய்ததாக 18ம் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார். 


மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கினால் அவர் அப்பதவியிலிருந்து ஜனாதிபதியாவதற்கு ஒரு தோட்டாவை மாத்திரமே செலவு செய்வாரென்பதை நன்கு புரிந்து வைத்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இறுதிவரை அதற்கான சந்தர்ப்பமொன்றை ஏற்படுத்தித்தர மாட்டாரெனவும் கூறினார்.



கொலை கலாசாரத்தை வரலாறாக கொண்டவர்கள் ராஜபக்ஷ குடும்பத்தினர். ‘கொலை’ செய்வது அவர்களின் பரம்பரை வியாதியாகும். இதனை குணப்படுத்த முடியாது என்றும் ரஞ்சன் ராமநாயக்க எம்.பி. கூறினார்.

ராஜபக்ஷ ஆட்சியின் போது இடம்பெற்ற கொலைகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம். ராஜபக்ஷவுக்கும் அவரது மகன்களுக்கும் தம்மைவிட சிறந்த விளையாட்டு வீரர்கள் இருந்தால் பொறுத்துக் கொள்ள இயலாது. அதற்காகத்தான் 23 வயதேயான தாஜுதீன் என்னும் ரகர் விளையாட்டு வீரரை கொலை செய்து பின்னர் அதனை விபத்தாக காண்பித்தார்கள். உண்மையை தட்டிக் கேட்ட ஊடகவியலாளர்களான லசந்த விக்கிரமதுங்க கொலை செய்யப்பட்டார். பிரதீப் எஹெலியகொட கடத்தப்பட்டார், மத்தனா இஸ்மாயில் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டதாக ரஞ்சன் தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments