Latest News

June 20, 2015

உலக அகதிகள் தினம் இன்று இலங்கை அகதிகளுக்கு விடிவு பிறக்குமா?
by admin - 0

உலக அகதிகள் தினம் இன்று

இலங்கை அகதிகளுக்கு விடிவு பிறக்குமா?

மனிதப்பிறவியில் அகதி வாழ்க்கை என்பது அவதி வாழ்க்கை உலகில் பல்வேறு நாடுகள் இருந்தாலும் அந்த நாடுகளில் சில நாடுகள் ஒற்றுமை இல்லை என்பது முற்றிலும் உண்மை சில நாடுகளில் நிற பிரச்சினை மதப்பிரச்சினை ஜாதி பிரச்சினை இப்படி பல இன்னல்கள் இருக்கின்ற காரணமாக சொந்த நாட்டை விட்டு பல லட்சம் பேர் வேற நாட்டிற்கு செல்லுகின்றனர் அதை விட பலர் இயற்கை பேரிடர் காரணமாகவும் பட்டினி போன்ற காரணமாகவும் மற்ற நாடுகளுக்கு போகிறவர்களை அகதிகள் என்ற பட்டம் கொடுக்கப்படுகிறது

உலகநாடுகளில் அகதிகளாக அதிகமாக இருப்போர் ஆப்பிரிக்கர்கள் இதனால் இத்தினம் முதலில் ஆப்பிரிக்க அகதிகள்; தினமாகத்தான் கடைபிடிக்கப்பட்டது இது போன்ற நிகழ்வை வரலாற்று தினமாக மாற்ற வேண்டும் என்ற நல்ல நோகக்தத்திலும் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள அகதிகளுக்கான தமது ஆதரவினை தெரிவிக்கும் வகையிலும் 2000ம் ஆண்டில் ஜக்கிய நாடுகள் பொதுச்சபையின் தீர்மானம் நிறைவேற்றி ஆண்டுதோறும் ஜீன் 20ம்தேதியை உலக அகதிகள் தினமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது அன்று முதல் அனைத்து கண்டங்களிலும் உள்ள அகதிகள் இத்தினத்தை கொண்டாடுவதும் அன்றைய நாளில் ஆர்ப்பாட்டங்கள் கருத்தரங்குகள் இசை நிகழ்ச்சி நினைவேந்தல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன

அகதிகள் மற்றும் புலம்பெயர்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்பது குறிப்பிடதக்கது இந்தியாவை பொறுத்தவரைக்கும் அண்ணிய நாடுகளில் இருந்து வந்து அகதிகாளக இருக்கும் மக்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது 1983ம்ஆண்டில்; இலங்கையில் இருந்து மலைவாழ் தமிழர்கள் அகதிகளாக வந்தனர் அப்போது அவர்களுக்கு வீடு மற்றும் இதர வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது மட்டுமல்லாமல் குடியுரிமையும் வழங்கப்பட்டது

1990களில் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டில் போரில் ஈழத்தமிழர்கள் இடம் பெயர்ந்து திசை தெரியாமல் சென்றனர் அகதிகளாக சென்றவர்களில் 95 சதவீத மக்கள் தமிழகத்தை தேடி வந்தனர். தமிழகத்திலுள்ள கடலோர பகுதிகளான புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டிணம் மீமிசல் கோட்டைப்பட்டிணம் அதுப்போல் இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் மண்டபம் தங்கச்சிமடம் இப்படி எங்கு படகு கரை ஒதுங்குகிறதோ அங்குள்ள காவல் நிலையங்களில் மூலம் விசாரித்து தமிழகத்தில் அப்போது அமைக்கப்பட்டிருந்த 140க்கு மேற்பட்ட முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர் பிறகு ஓரு சில முகாம்கள் தனியார் இடங்களில் இருந்த காரணமாக முகாம்கள் குறைக்கப்பட்டு தற்போது 110முகாம்கள் உள்ளன அதில் 1995ல் 99.469பேர் இருந்தனர் பிறகு 2005ம்ஆண்டுகளில் ஓரளவு மக்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்பினர் தற்போது 65.570 அகதிகள் முகாம் பதிவிலும் 34.788பேர் காவல்துறை பதிவிலும் தமிழகத்தில் உள்ளனர்

ஈழத்தமிழர்களை பொறுத்தவரைக்கும் எங்கேயும் ஒரு நிலையான இடம் இல்லாமல் தவிக்கின்றனர். இலங்கையிலுள்ள தமிழர்கள் இங்கு 20 முதல் 25வருடங்கள் அகதிகளாக வாழ்ந்து விட்டோமே இனிமேல் என்ன செய்வது என்று நினைத்து கொண்டு இருந்த அகதிகளுக்கு ஆஸ்திரேலியா ஒரு அறிக்கை வெளியிட்டது. இலங்கையிலும், இந்தியாவிலும் இருந்து அகதிகளாக வரும் ஈழத்தமிழர்களுக்கு உடனே குடியுரிமை கொடுக்கிறோம் என்று அறிக்கை வெளியிட்டதன் காரணமாக ஆசைப்பட்டு இலங்கை அகதிகள் மட்டுமில்லாமல் வங்கதேச அகதிகளும் போட்டி போட்டு கொண்டு சென்றார்கள்

சென்றவர்களில் 10ல்ஒரு பங்கு மக்கள் எங்குதான் காணாமல் போனார்கள் என்று இதுவரைக்கும் தெரியவில்லை. தீவுக்குள் பிறந்து கடலிலே உயிர் இழக்கின்றனர் என்பதை பார்க்கும் போது பெரும் சோதனையாக உள்ளது 2009ம் ஆண்டு நடந்த உள்நாட்டு போரினால் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் சிங்கள இராணுவத்தினர்களால் கொன்று குவிக்கப்பட்டனர். இதற்கு மேலும் இலங்கையில் போய் தமிழர்கள் குடியேறினாலும் பயந்த வாழ்க்கை தான் வாழ்வார்கள்.

உலகத்திலேயே தமிழர்கள் 63க்கு மேற்பட்ட நாடுகளில் வாழ்ந்தாலும் தமிழர்களுக்கு என்று சொந்தமான நாடு ஏதும் உண்டா என்ற கேள்விக்கு பதில் இல்லை தமிழ் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது ஆனால் தமிழர்கள் இறந்து கொண்டுதான் இருக்கிறார்கள் எந்த நாட்டிலும் தமிழ் வளர்ச்சிக்காக பேசுபவர்கள் தமிழ் இனத்திற்காக பேசுவது இல்லை இனியாவது இலங்கை அகதிகள் இன்னல்கள் தீருமா என்ற கேள்விக்கு பதில் இல்லை

தமிழக அகதிகள் முகாம்களில் உள்ள சில குடும்பங்களில் உடல்நிலை சரியில்லாத முதியோர்கள், கல்லூரி படிப்பின் காரணமாகவும் பெரிய குடும்பம் காரணமாகவும் கொடுக்கப்பட்ட பத்துக்குபத்து அளவு வீடு பற்றாக்குறை சுகாதார குறைவு காரணமாக சில குடும்பங்கள் வெளியில் வாடகைக்கு வீடு எடுத்து 5 கி.மீ க்குள் தங்குகின்றனர். இவர்களும் பெரிய துன்பத்திற்கு ஆளாகின்றனர். முகாம் உள்ளேயே தங்க வேண்டும் என்று அடிக்கடி வருவாய்த்துறை மற்றும் கீயுபிராஞ்ச் வற்புறுத்தல் காரணமாகவும் அதுமட்டுமல்ல தமிழகத்திற்கு எங்காவது பிரதமர், ஜனாதிபதி வந்தாலும் உடனே தணிக்கை என்ற பெயரில் ஒன்று முதல் மூன்று நாட்கள் வெளியே போக முடியாத நிலைமையில் உள்ளார்கள்

மத்தியில் பாஜக அரசு பதவியேற்றவுடன் முகாம் மக்கள் நம்பிக்கையில் இருந்தனர் எப்படி என்றாலும் குடியுரிமை கிடைத்துவிடும் என்ற பேராசையில் இருந்தனர் ஆனாலும் 1ஆண்டு ஆகியும் அதற்கான நடவடிக்கையில் எந்த முன்னேற்றம் அடைந்தாக தெரியவில்லை இவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று தமிழகத்திலுள்ள முக்கிய கட்சிகள் வலியுறுத்துகின்றனர்.ஆனால் அதற்கு தேவையான நடவடிக்கையை யாரும் கவனத்தில் கொள்ளவில்லை என்பதே நிதர்சனம் இந்த உலக அகதிகள் தினத்திலாவது இவர்களுக்கு விடிவு பிறக்குமா?

சமூக ஆர்வலர் பொ.ஜெயச்சந்திரன்

அலைபேசி-9751239014
« PREV
NEXT »

No comments