Latest News

June 20, 2015

இன்று சர்வதேச அகதிகள் தினம் ( World Refugee Day 20-06-2015) வீடு இல்லை... நாடு இல்லை...விதிவிட்ட வழியா?
by admin - 0

இன்று சர்வதேச அகதிகள் தினம்.இன்றைய நாட்களில் உலகில் 7.6 மில்லியன் மக்கள் அகதிகளாக பதிவாகியிருப்பதாக ஐ.நா. குறிப்பிட்டிருப்பதுதான் இந்த உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கும் செய்தியாகும்.
விவசாயி, தமிழ் செய்திகள், ஈழம் செய்திகள், யாழ்ப்பாண  செய்திகள், இந்தியசெய்திகள், கவிதைகள், விடுப்பு, பல்கலைக்கழகம், விடுதலை, கடல், தரை, இலங்கை, வவுனியா, கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, முல்லைதீவு, TGTE, Transnational Government of Tamil Eelam, Tamilnews, tamilwin, athirvu, newjaffna, jaffna,vivasaayi, kavinthan, tamilwin,lankasri, jaffna, kilinochchi, vavuniya, TGTE,TGTE-WCE,WCE-TGTE,TGTE-HOMELAND.ORG, Transnational Government of TamilEelam, www.lankasri.com,tgte-us, naathamnews.com, முள்ளிவாய்க்கால்,tamilwin , நாம் தமிழர்

இருப்பிடமற்று உலகமெங்கும் அகதிகளாக ஈழத்துமக்களும் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.இந்த நிலையில் அண்மையில் ஐ.நா வெளியிட்ட சிலதகவல்கள் உலகின் கையறு அரசியல் நிலையை காட்டுகின்றது.

7.6 மில்லியன் மக்கள் அகதிகளாக பதிவாகி இருப்பதாக இது 1994ஆம் ஆண்டுக்கு பின்னர் அதிகளவான அகதிகளின் எண்ணிக்கைஎன்றும் குறிப்பிட்டுள்ளது. ஐ.நாவின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் ஆலயம் வெளியிட்ட அறிக்கையியே இந்தவிபரத்தைக் கூறுகின்றது.
உலகின் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு சிரியா பிரச்சினை முக்கியகாரணி என குறிப்பிடப்பட்டுள்ளது. உலகின் மொத்த அகதிகள் எண்ணிக்கையில் 55 வீதமானவர்கள் வெறும் 5 நாடுகளையே பிரதிநிதித்துவப் படுத்துகின்றனர். அது ஆப்கானிஸ்தான், சோமாலியா, ஈராக், சூடான் மற்றும் சிரியா ஆகியனவாகும். அடுத்தநிலையில் ஈழத்தைசேர்ந்த அகதிகள் இடம்பெறுகின்றனர்.
விவசாயி, தமிழ் செய்திகள், ஈழம் செய்திகள், யாழ்ப்பாண  செய்திகள், இந்தியசெய்திகள், கவிதைகள், விடுப்பு, பல்கலைக்கழகம், விடுதலை, கடல், தரை, இலங்கை, வவுனியா, கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, முல்லைதீவு, TGTE, Transnational Government of Tamil Eelam, Tamilnews, tamilwin, athirvu, newjaffna, jaffna,vivasaayi, kavinthan, tamilwin,lankasri, jaffna, kilinochchi, vavuniya, TGTE,TGTE-WCE,WCE-TGTE,TGTE-HOMELAND.ORG, Transnational Government of TamilEelam, www.lankasri.com,tgte-us, naathamnews.com, முள்ளிவாய்க்கால்,tamilwin , நாம் தமிழர்

அதேபோல் உலகின் 81 வீதமானஅகதிகள் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளிலேயே அடைக்கலம் பெற்றுள்ளனர். இது ஒருதசாப்தத்திற்கு முன்னரைவிடவும் 11 வீதஅதிகரிப்பாகும். ‘இது உண்மையில் அபாயகரமான இலக்கத்தை எட்டியுள்ளது. இது ஒவ்வொரு தனிமனிதனும் முகம்கொடுக்கும் பிரச்சினையின் பாரிய அளவுகோளை காட்டுகிறது. சர்வதேச சமூகம் மோதலை தவிர்த்து அவர்களுக்கு தீர்வைவழங்காததை வெளிக்காட்டுகிறது’ என ஐ.நா குறிப்பிடுகின்றது.

அகதிகள் நிலையத்தின் தலைவர் அன்டோனியோகுட்டரஸ் குறிப்பிட்டார். ஊலக அகதிகள் எண்ணிக்கை 7.6 மில்லியனாக உயர்ந்திருப்பதன் மூலம் ஒவ்வொரு 4.1 வினாடிக்கு ஒருவர் வீதம் அகதிகளாக இடம்பெயர்கின்றனர். எனவே இவ்வாறான ஒவ்வொரு வினாடியும் ஒருவர் அகதியாக வெளியேறுகிறார் என்றும் குட்டரஸ் குறிப்பிட்டார். சர்வதேச அரசுகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தமது தரவுகளை அடிப்படையாக கொண்டே இந்தவிபரம் வெளியிடப்பட்டதாக ஐ.நா அகதிகள் நிலையம் கூறியது. கடந்த 32 ஆண்டுகளாக ஆப்கான் நாட்டவர்களே அதிகமாக அகதிகளாக உள்ளனர்.
இவர்களில் 95 வீதமானவர்கள் ஈரான் அல்லது பாகிஸ்தானில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். இதற்குஅடுத்து 2012 இல் சோமாலிய நாட்டவரே அதிகம் அகதிகளாக உள்ளனர். தொடர்ந்து ஈராக் மற்றும் சிரியநாட்டவர்கள் உள்ளனர். எனினும் சிரியாவிலிருந்து கடந்த ஆறு மாதங்களில் அகதிகளாக இடம்பெயர்ந்த ஒருமில்லியன் மக்கள் உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.ஈழத்தைப் போலவேஉலகின் பலநாடுகளில் போர்களின் காரணமாக மக்கள் அகதிகள் ஆக்கப்பட்டவர்கள்.கடந்த ஆண்டில் 76 லட்சம் அகதிகள்
உலகஅளவில் 2012-ம் ஆண்டுமட்டும் 76 லட்சம் மக்கள் அகதிகள் ஆக்கப்பட்டுள்ளதாக ஐக்கியநாடுகள் சபையின் அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
விவசாயி, தமிழ் செய்திகள், ஈழம் செய்திகள், யாழ்ப்பாண  செய்திகள், இந்தியசெய்திகள், கவிதைகள், விடுப்பு, பல்கலைக்கழகம், விடுதலை, கடல், தரை, இலங்கை, வவுனியா, கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, முல்லைதீவு, TGTE, Transnational Government of Tamil Eelam, Tamilnews, tamilwin, athirvu, newjaffna, jaffna,vivasaayi, kavinthan, tamilwin,lankasri, jaffna, kilinochchi, vavuniya, TGTE,TGTE-WCE,WCE-TGTE,TGTE-HOMELAND.ORG, Transnational Government of TamilEelam, www.lankasri.com,tgte-us, naathamnews.com, முள்ளிவாய்க்கால்,tamilwin , நாம் தமிழர்

இதில் கடந்த ஆண்டு 76 லட்சம் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1994-ம் ஆண்டுக்கு பிறகு அதிக எண்ணிக்கையிலான மக்கள் அகதிகளாக இருப்பது இப்போதுதான் என்று அந்த அறிக்கை கூறுகிறது. இதில் 55 சதவீத அகதிகள் ஆப்கானிஸ்தான், சோமாலியா, ஈராக், சூடான் மற்றும் சிரியா ஆகிய 5 நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அகதிகள் எண்ணிக்கையில் உலகஅளவில் ஆப்கானிஸ்தான் முதல் இடம் வகிக்கிறது. கடந்த 32 வருடங்களாக இது தொடர்ந்து வருவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இந்நாட்டின் அகதிகள் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் ஈரானில் தஞ்சமடைந்துள்ளனர். இரண்டாவது இடத்தில் சோமாலியாவும், மூன்றாவதாக ஈராக்கும் உள்ளதாக ஐ.நா. அறிக்கை தெரிவித்துள்ளது.தமது இருப்பிடங்களைவிட்டுபலவந்தமாகத் தப்பிஓடச் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளதாக ஐக்கியநாடுகள் அகதிகளுக்கான அமைப்பு கூறியுள்ளது.

ருவண்டாமற்றும் முன்னாள் யூகோஸ்லாவிய நெருக்கடி காலகட்டத்துக்குப் பிறகு இதுதான் இடம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துக் காணப்படும் காலமாகும்.கடந்தஆண்டில் 80 லட்சம் பேர் இடம் பெயர்ந்திருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் போர் காரணமாகவே இடம்பெயர்ந்தனர்.

அனைத்து 4.5 கோடி அகதிகளில் அரைவாசிப் பேர், ஆப்கானிஸ்தான், சோமாலியா, இராக், சிரியாமற்றும் சுடான் ஆகியநாடுகளைச் சேர்ந்தவர்களாவர். நீண்டகால மோதல்களை தீர்க்க முடியாத அல்லது புதிய மோதல்கள் உருவாவதை தடுக்க முடியாத சர்வதேச சமூகத்தின் இயலாமையையே இந்த அதிகரிப்புக்கள் காண்பிப்பதாகவும் ஐநா கூறுகிறது.
உலகில் பத்துலட்சத்திற்கு மேற்ப்பட்டவர்கள் ஈழத்தை சேர்ந்த அகதிகள்.கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் 10 ஆயிரத்து 311 பேரும்,கனடாவில் 12 ஆயிரத்து 959 பேரும், ஆஸ்திரேலியாவில் 597 பேரும் அகதிகளாகதஞ்சம் அடைந்திருக்கிறார்கள்.

கனடாவில் மாத்திரம் 4 லட்சம் பேர் தங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த ஆண்டுடன் ஆவுஸ்ரேலியாவில் தஞ்சமடைந்த அகதிகளின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டுமென எதிர்பார்க்கப்படுகுpறது.

இந்தியாவில் அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டிருக்கும் 1 லட்சத்திற்கும் அதிகமான ஈழத்தமிழர்களை போலபுலம் பெயர்ந்து வந்திருக்கும் பலரும் சொல்லொண்ணா வேதனையில் சிக்கித் தவிக்கிறார்கள். இலங்கைக்கு உள்ளேயே இடம் பெயர்ந்தவர்கள் ஒரு லட்சத்து 56 ஆயிரம் பேர் என புள்ளிவிபரங்கள் சொல்கின்றன.

யாழ்ப்பாணத்தில் மட்டும் 50 ஆயிரம் மக்கள் அகதி முகாமிலே முடக்கி வைக்கப்பட்டு இருக்கிறார்கள். சம்பூர் முகாமில் 6000 தமிழ் குடும்பங்கள் இருப்பதாக அரசாங்கமே சொல்கிறது. வடக்குமற்றும் கிழக்கில் 2 லட்சம் ஏக்கர் காணியை ராணுவம் ஆக்கிரமித்து இருக்கிறது. வன்னிப் பிரதேசத்தில் மட்டும் 6 ஆயிரத்து 381 ஏக்கர் காணியை ராணுவம் ஆக்கிரமித்து இருக்கிறது.

ஈழத் தமிழர்களின் வாழ்க்கை நடுக்கடலில் தத்தளிக்கும் தோணியாகி விட்டது. உலகமெங்கும் வாழ நிலம் மறுக்கப்படும் மக்கள் இப்படித் தான் கள்ளத் தோணிகளில் தஞ்சம் தேடிச் செல்லுகின்றனர்.

வாழ்ந்த மண்ணை விட்டு மிகவும் ஆபத்து நிறைந்த கடலில் படகுகளை நம்பி மக்கள் புறப்பட்டு தஞ்சம் தேடுவது மனித வாழ்க்கையில் மிகவும் கொடியதொரு தருணம்.
1983 இல் இலங்கையில் யுத்தம் வெடித்த பொழுது இலங்காராணி என்ற கப்பல் மூலம் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டார்கள் கொழும்பில் வசித்த தமிழர்கள். ஈழப்போர் ஆரம்பித்த அன்று முதல் ஈழத்துமக்கள் கள்ளத் தோணிகளில் உலகக் கடல் எங்கும் அலைகின்றனர்.

ஈழத்து மண்ணிலிருந்து புலம் பெயர்ந்து சென்று உலகமெங்கும் வசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் உலகக்கடல் வழியே கள்ளத் தோணிகளில் சென்றிருக்கிறார்கள்.
தாங்கள் பிறந்து வளர்ந்த பூர்வீக மண்ணை விட்டு உயிரை பாதுகாக்கும் ஏக்கத்துடன் தொகை தொகையாக ஈழ மக்கள் அகதிகளாகச் சென்றுள்ளனர். ஈழத்து அகதிகளின் படகுகள் ஒதுங்காத நாடுகளில்லை. உலகக் கடலில் பலமுறை கவிழ்ந்து விட்டன ஈழத்து அகதிகளின் கள்ளத் தோணிகள்.

போர்களத்திலிருந்து உயிரை பாதுகாக்க கடலில் ஓடிய குழந்தைகளும் சிறுவர்களும் பெண்களும் என்றுபலர் கடலில் மாண்டு போயிருக்கிறார்கள்.ஈழப்போர் தொடங்கிய நாட்களிலிருந்து ஈழத்து மக்கள் அகதிகளாக உலகக்கடல் எங்கும் இந்தத் துயரப் பயணத்தை மேற்கொள்ளுகிறார்கள்.







« PREV
NEXT »

No comments