இன அழிப்புக்கு நீதி கோரி ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் ஈழத் தமிழர்களால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
ஐ.நா.வின் 48வது மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் இடம்பெற்று வருகின்ற நிலையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இறுதிப்போரில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் இனஅழிப்பு தொடர்பில் விசாரணை நடத்தவேண்டும் என்றும், ஈழத் தமிழர்களுக்கு நீதி வழங்கப்படவேண்டும் எனவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் புலிகளின் கொடிகளை ஏந்தியிருந்ததுடன் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உருவப்படங்களையும் ஏந்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment