தமிழ் சினிமா நடிகர் விவேக் நேற்று மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோ மற்றும் எக்மோ சிகிசச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அரவது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் 24 மணி நேரத்திற்கு பிறகே சொல்ல முடியும் என அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் நேற்று மாலை தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று காலை நடிகர் விவேக் அவர்கள் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விவேக்கின் உடல் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அவரது உடலுக்கு பொதுமக்களும் திரைத்துறை பிரபலங்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை 5 மணியளவில் அவரது உடலுக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டு மேட்டுக்குப்பம் மின் மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியானது.
ஆனால் மூன்றரை மணிக்கே விவேக்கின் உடலுக்கு குடும்பத்தினர் இறுதிச்சடங்குகளை தொடங்கினர். இதனை தொடர்ந்து தற்போது நடிகர் விவேக்கின் பூத உடல் ஊர்வலமாக மேட்டுகுப்பம் மின் மயானத்தில் காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்படவுள்ளது.
No comments
Post a Comment