தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடைநீக்கத்தின் தீர்வு நோக்கிய சட்டப்போராட்டம் தொடர்பாக பிரித்தானிய வாழ் மக்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள் ஒன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ளது.
2018ம் ஆண்டு பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளை நீக்கும்படி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மனு மூலம் விண்ணப்பித்திருந்தது. அந்நேரம் துரதிஷ்டவசமாக மேலும் தடையைத் தொடர உள்துறை அமைச்சகம் தீர்மானித்தது.
அதனைத்தொடர்ந்து தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் மேல்முறையீட்டு ஆணையத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மேல்முறையீடு செய்திருந்தது. அப்போதைய உள்துறை அமைச்சு தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் நீடிப்பதற்கு முடிவெடுத்தது. அவ்வேளையில் தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மேல்முறையீட்டு ஆணையத்தின் வல்லுநர் குழு தடை மீளாய்வு குறித்து முடிவு ஒன்றை எடுத்திருந்தது. அவ்முடிவானது தமிழீழ விடுதலைப் புலிகளின் தடை என்பது அடிப்படை சட்ட வரையறைகளுக்கு முரணானது என்பதை விசேட தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியிருந்தது.
அமைச்சரின் பணிந்துரை கூட்டுப் பயங்கரவாதப் பகுப்பாய்வு மையத்தின் (JTAC) கருத்துகளைத் துல்லியமாகச் சரியாக சுருக்கித் தரவில்லை என்றும் தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மேல்முறையீட்டு ஆணையம் கண்டறிந்தது. இந்தச் செய்திகள் “மிக துல்லியமாக கவனிக்கப்பட வேண்டியவை” என்று ஆணையம் கருதியது. ஆகவே தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் நீடித்து வைத்துக் கொள்ளும் முடிவு பிழையானது என்று தீர்ப்பளித்தது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மேல்முறையீடு வெற்றி பெற்றது என்பது உங்களில் பெரும்பாலானவர்கள் அறிந்த விடயமே. இந்த வெற்றி படியின் அடுத்தகட்டமாக, உள்துறை அமைச்சரின் மூல முடிவு நீக்கம் செய்யப்பட்ட போது தடைநீக்க விண்ணப்பத்தை மீளாய்வு செய்யக் கால அவகாசம் தருமாறு அமைச்சர் மேல்முறையீட்டு ஆணையத்தை வேண்டிக் கொண்டார்.
மேல்முறையீட்டு ஆணையம் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடைநீக்கம் செய்யக் கோரும் விண்ணப்பத்தை மீளாய்வு செய்வேன் என்ற உள்துறை அமைச்சரின் உறுதிமொழியை feb 18ம் நாள் ஏற்றுக்கொண்டது.
மாண்புமிகு உள்துறை அமைச்சர் பிரீத்தி படேல் அவர்களிடம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கான கோரிக்கையை முன் வைப்போம். தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது நமக்கான தீர்வு இன்னும் கிடைக்கவில்லை. தீர்வினை நமதாக்கிக்கொள்வது ஒவ்வொரு பிரித்தானிய வாழ் தமிழர்களின் கையில் தான் தங்கியுள்ளது. இதற்கு உங்கள் ஆதரவும் செயல்பாடும் மிகவும் முக்கியமானது.
நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு கோரி உள்துறை அமைச்சுக்கு கடிதம் மூலம் எழுதுமாறு உங்கள் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மின்மடல் மூலமாக தொடர்பு கொண்டு வேண்டுகோள் விடுப்பதற்கு இந்த கீழேயுள்ள இணையப்பொறி முறையினை பயன்படுத்திக்கொள்ளலாம்.
நீங்கள் செய்யவேண்டியது…….
www.lifttheban.uk எனும் இணைப்பினை அழுத்தி “Click Here to Email Your MP” என்ற பட்டினை அழுத்தியவுடன் புதிய திரையின் இறுதிப்பகுதியின் பெட்டியில் உங்கள் முகவரி அஞ்சல் குறியீட்டைப் (UK Residing Address Post Code) பதிவு செய்து “FIND MY MP” என்ற பட்டினை அழுத்தியவுடன் உங்கள் தொகுதி பாராளுமன்ற உறுப்பினருக்கு அனுப்புவதற்கான திரை தோன்றும் அதில் உங்கள் பெயர் மற்றும் மின்னஞ்சல் விபரங்களை பதிவு செய்து Submit என்ற பட்டினை அழுத்தியவுடன் உங்களுடைய மின்னஞ்சல் உங்கள் பாராளுமன்ற உறுப்பினருக்கு அனுப்புவதற்கான மாதிரி காண்பிக்கப்படும் இறுதியாக I agree எனும் பட்டினை அழுத்தி Confirm & Send என்ற பட்டினை அழுத்தியவுடன் உங்களுடைய மின்னஞ்சல் உங்கள் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சென்றடையும்.
இவ்வாறு பிரித்தானிய வாழ் தமிழர்கள் தத்தமது தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலம் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கூடுதலான அழுத்தமாக அது மாற்றமடைவதுடன் குறித்த தீர்ப்பினை தீர்வாக மாற்ற பிரித்தானிய அரசிற்கு அழுத்தம் கொடுப்போம்.
மேலதிக உதவி தேவையெனில் எம்மை தொடர்புகொள்ளுங்கள் :
தொலைபேசி எண் – 07926899145 அல்லது மின்னஞ்சல் – adminuk@tgte.org
தமிழர் தலைவிதியை தீர்மானிக்க நீங்கள் செலவிடுவது ஒரு நிமிடம் மட்டுமே
No comments
Post a Comment