Latest News

February 03, 2021

இன்று வெற்றிகரமாக முடிவடைந்த போராட்டம் மீண்டும் நாளை ஆரம்பமாகும் - போராட்டக்காரர்கள் அறிவிப்பு
by Editor - 0

பொத்துவில்லில் இருந்து பொலிகண்டி வரையிலான போராட்டம் இன்று காலை கொட்டும் மழைக்கு மத்தியில் ஆரம்பமாகியது.


இதில் சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள். மதத் தலைவர்கள், வடக்கு கிழக்கைச் சேர்ந்த பல தமிழ் அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப் படுத்திய மக்கள் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

முன்னதாக மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த பொலிஸ் நிலையங்கள் ஊடாக இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளும் மக்கள் மிரதிநிதிகளுக்கும், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் நீதிமன்றத் தடை உத்தரவு பொலிசார் மூலம் வழங்கப்பட்டிருந்தன.

இவ்வாறு பொலிஸ் உத்தரவையும் தாண்டி புதன்கிழமை இப்போராட்டம் மிகவும் வெற்றிகரமாக மட்டக்களப்பு தாழங்குடாவில் புதன்கிழமை மாலை நிறவு பெற்றதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

வியாழக்கிழமை காலை அவ்விடத்திலிருந்து மீண்டும் பொலிகண்டி நோக்கி புறப்படவுள்ளது.


இந்நிலையில தமிழ் மக்களின் இப்போராட்டத்தில் முஸ்லிம் அரசியல் பிரமுகர்களும், முஸ்லிம் மக்களும் கலந்து கொண்டு வலுச்சேத்திருந்தனர்.

போத்துவில் இருந்து மட்டக்களப்பு வரையில் பிரதான நெடுஞ்சாலையூடாக வந்த இப்பேரணியையடுத்து வீதியில் பொலிஸார், இராணுவதினர், மற்றும் விசேட அதிரடிப்படையினரும், புலனாய்வுத் துறையினரும், தமது கடமையினை முடுக்குவிடப்பட்டிருந்ததையும் அவமதானிக்க முடிந்தது.

அரசியல் கைத்திகளின் விடுதலை, காணிவிடுவிப்பு, அத்துமீறிய குயேற்றம், நிரந்தர அரசியல் தீர்வு, காணி ஆக்கிரமிப்பு, பண்ணையாளர்களைக் கடத்துதல், உள்ளிட்ட பல விடையங்களுக்கு நிரந்தரத் தீர்வு வேண்டியே தாம் அகிம்சை ரீதியில் பொத்துவில் இருந்து பொலிகண்டி வரைக்குமான போராட்டம் இடம்பெறுவதாக இதில் கலந்து கொண்ட போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

« PREV
NEXT »

No comments