ஊழல் குற்றச்சாட்டில் 4 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்று விடுதலையான சசிகலா, காரில் அதிமுக கொடி பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக சார்பில் அமைச்சர்கள் டிஜிபி.,யிடம் புகாரளித்தனர்.
ஊழல் குற்றச்சாட்டில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, கடந்த ஜன.,27ல் விடுதலையானார். அதற்கு முன்னதாக அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால், பெங்களூருவில் உள்ள அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. பின்னர், கடந்த 31ம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன சசிகலா, மருத்துவமனையில் இருந்து அதிமுக கொடியுடன் கூடிய காரில் புறப்பட்டார். இதற்கு அதிமுக தரப்பில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.
வரும் 8ம் தேதி பெங்களூருவில் இருந்து சசிகலா தமிழகம் வரவுள்ளார். இந்நிலையில், அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தியதற்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் டிஜிபி அலுவலகத்தில் புகாரளித்தனர். அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், தங்கமணி, வேலுமணி மற்றும் மூத்த நிர்வாகிகள் மதுசூதனன், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் புகாரளித்தனர். அதில், அதிமுக கொடியை சசிகலா இனி பயன்படுத்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கோரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
No comments
Post a Comment