Latest News

November 05, 2020

எனக்கும், என் அப்பாவின் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது - விஜய் அதிரடி அறிவிப்பு
by Editor - 0

என் தந்தை அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளதை ஊடகங்கள் மூலம் அறிந்தேன், அரசியல் கட்சி விவகாரத்தில் எனக்கும் என் தந்தைக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று நடிகர் விஜய் திட்டவட்டமாக மறுத்துள்ளார். நடிகர் விஜய் விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றி உள்ளதாகவும் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சி ஆரம்பக்க உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின, அத்துடன் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியின் பெயரை, அகில இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் நடிகர் விஜய் பதிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் பரவியது 


இதை விஜய்யின் பிஆர்ஓ ரியாஸ் அகமது இந்த செய்தி பொய் என்று திட்டவட்டமாக மறுத்தார். நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை என்றார். அதேநேரம் விஜய் அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை என்றாலும் விஜய்யின் பெயரில் அரசியல் கட்சி இயக்கத்திற்கு விண்ணபிக்கப்பட்டிருப்பது உண்மை என்றே டெல்லி தரப்பு ஊடகவியலாளர்கள் சொன்னார்கள்.

இது தொடர்பாக விளக்கம் அளித்த விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் அளித்த விளக்கத்தில், அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சிக்கு நான் தான் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளேன். இது என்னுடைய முயற்சி. இது விஜயின் அரசியல் கட்சி அல்ல" என்று கூறினார்.

இதனிடையே அரசியல் கட்சி விவகாரத்தில் எனக்கும் என் தந்தைக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று நடிகர் விஜய் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், " இன்று என் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகா் அவா்கள் ஓா் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார் என்பதை ஊடகங்களின் வாயிலாக அறிந்தேன். அவா் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித தொடா்பும் இல்லை என திட்டவட்டமாக எனது ரசிகா்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதன் மூலம் அவா் அரசியல் தொடா்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைகளும் என்னை கட்டுப்படுத்தாது என்பதை தெரியப்படுத்திக்கொள்கிறேன். மேலும் எனது ரசிகா்கள், எனது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளார் என்பதற்காக தங்களை அக்கட்சியில் இணைத்துக்கொள்ளவோ கட்சி பணியாற்றவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். அக்கட்சிக்கும் நமக்கும் நமது இயக்கத்திற்கும் எவ்வித தொடா்பும் கிடையாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் என் பெயரையோ புகைப்படத்தையோ எனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடா்புபடுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவா்கள் மீது தகுந்தநடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்." இவ்வாறு கூறியுள்ளார்.




« PREV
NEXT »

No comments