கொரோனா வைரஸ் தொற்றால் இறக்கும் நபர்களின் உடல்களை தகனம் செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் குழு எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை என கொரோனாவால் இறக்கும் நபர்களை தகனம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்த நிபுணர்கள் குழுவின் உறுப்பினர் பேராசிரியர் மெத்திகா விதானகே தெரிவித்துள்ளார்.
இந்த நிபுணர்கள் குழுவில் சுகாதார அமைச்சின் அதிகாரிகள், சட்ட வைத்திய நிபுணர்கள், பல்வேறு விசேட மருத்துவ நிபுணர்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
உலக பரிசோதனை ஆய்வுகளுக்கு அமைய கொரோனாவின் புதிய நிலைமை தொடர்பாக இரண்டு மாதங்களுக்கு பின்னர் மீளாய்வு செய்யப்படும்.
கொரோனாவால் இறக்கும் நபர்கள் இறந்து 27 நாட்கள் கடந்த பின்னரும் நுரையீரல்களில் வைரஸ் உயிருடன் இருக்கும் என பிரித்தானிய ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரிவித்துள்ளனர் எனவும் பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், சில முஸ்லிம்களின் மரணங்கள் தொடர்பாகவே இந்த பிரச்சினை பெரிதுப்படுத்தப்படுவதாகவும் சைவர்கள், கத்தோலிக்கர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் இப்படியான கோரிக்கை முன்வைத்தால் என்ன செய்வது என அவதானிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
No comments
Post a Comment