முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் இருவர் மீது தாக்குதல்! ஊடக_அடக்குமுறை
முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப் பற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட முறிப்பு காட்டுப் பகுதியில் சட்டவிரோத மரக்கடத்தல் இடம்பெறுவதாக கிடைத் தகவலை அடுத்து செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் இருவர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.
மரக்கடத்தலில் ஈடுபட்டுவருகின்ற கும்பலைச் சேர்ந்தவர்களே காட்டுமிராண்டித்தனமாக ஊடகவியலாளர்களைத் தாக்கியுள்ளனர்.
சம்பவத்தில் குமணன் மற்றும் தவசீலன் ஆகிய இருவரும் காயம் அடைந்துள்ளார்..
No comments
Post a Comment