பிரதமர் அலுவலகம், அலரி மாளிகை, விஜேராமையில் உள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலம் ஆகியவற்றில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் எந்தவொரு நபருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என, பிரதமர் அலுவலகம் வெ ளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பாதுகாப்பு பிரிவின் அதிகாரி, அதிகாரியொருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை எனத் தெரிவித்துள்ள பிரதமர் அலுவலகம், இவ்வாறு தொற்றுக்குள்ளானவர், பிரதமர் பாதுகாப்பு பிரிவுடன் இணைந்த வெளிப்புற பிரிவொன்றின் அதிகாரி என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் குறித்த தொற்றாளர் இந்த மாதம் 17ஆம் திகதிஇ தொடக்கம் கடமைக்கு சமூகமளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
No comments
Post a Comment