Latest News

October 28, 2020

மைக்பொம்பியோவின் இலங்கை விஜயம் - சீற்றத்தில் சீனா
by Editor - 0


இலங்கையுடனான இராஜதந்திர அணுகுமுறையில் அமெரிக்கா ஒரே நேரத்தில் இரண்டு எதிரெதிர் பாத்திரங்களை வகிப்பதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் குற்றம் சாட்டியுள்ளது.

இன்றையதினம் கொழும்பில் உள்ள வெளியுறவு அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க இராஜதந்திர செயலாளர் மைக்பொம்பியோ, சீனா ஒரு வேட்டையாடும் நாடு என்றும், நிலத்திலும் கடலிலும் இறையாண்மையை மீறுவதாகவும் கூறியிருந்தார்.

இவரது கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் சீனத் தூதரகம் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் எதிர் கருத்துக்களை முன்வைத்துள்ளது.

குறித்த பதிவில் இலங்கை நட்பையும் ஒத்துழைப்பையும் ஊக்குவிப்பதில் நாம் மும்முரமாக இருக்கிறோம். ஆனால் அமெரிக்காவால் எப்போதுமே ஒரே நேரத்தில் இரண்டு வேடங்களில் நடிக்க முடியும் என்று பதிவிட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments