ரஜினி திரணகம கொலையினை புலிகள் மீது சுமத்திவரும் நிலையில் நடந்தவற்றினை செயற்பாட்டாளர் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார்.
தற்போதும் அதனை ஒரு தரப்பு கொண்டாட காரணமென்ன என்பதை அவர் போட்டுடைத்துள்ளார்.
இவரின் நினைவு நாளில் வெளிநாடுகளில் பதுங்கி இருக்கும் EPRLF கும்பலின் எச்சங்கள் தலித் அமைப்பு என்றும் மனித உரிமை குழுக்கள் இலக்கிய குழுக்கள் என பல பெயர்களில் மனித உரிமை பாடம் எடுப்பதும் அவரை புத்தியீவி என கதை எழுதுவதும் தொடர்ந்து நடக்குகிறது. 2009 களுக்கு பின்னால் இவை அதிகரித்து வருகிறது.
உண்மையில் தனிப்பட்ட காரணம் உடபட இரண்டு காரணங்களை முன் வைத்து ரஜினி திரணகம கொல்லப்பட்டார்.
முறிந்த பனை நூல் புலிகளை விமரிசித்து இருந்தாலும் இந்தியா அமைதிப்படை மற்றும் அதனோடு சேர்ந்து இயங்கி வடக்கு கிழக்கில் பத்மநாபா தலைமையில் கொலை, களவு, கடத்தல், கற்பழிப்பு என வெறியாட்டம் ஆடிய EPRLF ஆயுத கும்பலை பற்றியும் பேசி இருந்தது.
இந்திய ஆமியின் கொடூரங்கள் இப் புத்தகங்கள் வழியாக வெளிவருவதை இந்திய ஆமியின் ஒரு சாரார் விரும்பவில்லை. இந்திய ஆமியின் சார்பில் கொலை செய்வதற்கான திட்டத்தை இந்திய ஆமி தளபதிகளில் ஒருவரான கேணல் சசிகுமார் EPRLF அமைப்பின் ரஃபிக் என்பவரோடு சேர்ந்து திட்டமிட்டார்.
இந்த திட்டத்தின் படி EPRLF அமைப்பின் கார்த்திக் மற்றும் தாமஸ் ஆகிய இருவரும் இந்த கொலையை செய்தனர். திட்டத்தின் படி கொலை விழுந்த மறு கணமே புலிகள் மீது குற்றம் சுமத்தி EPRLF அறிக்கை வெளியிட்டது.
அதை மக்கள் மத்தியில் இந்தியா ஆமி ஏற்பாட்டில் EPRLF கொண்டு சென்றது. புலிகள் இயக்கம் மணலாறு காட்டுக்குள் இருந்த நிலையில் இதை EPRLF கும்பல் வேகமாக செய்தது.
இந்தியப் படை வெளியேறிய பின்னர் கொலை செய்த தாமஸ் டக்ளஸ் தேவானந்தா கும்பலில் செயல்பட்டு வந்தார். கார்த்திக் சில காலம் சுரேஷ் பிரம்மச்சந்திரனின் உதவியாளராக இயங்கி பின்னர் வெளிநாடு சென்று விட்டார்.
பிற்காலத்தில் தாமஸ் திருகோணமலை பகுதியில் தனிப்பட்ட தகராறு ஒன்றில் வெட்டி கொல்லப்பட்டார்.
இக்கொலைத் திட்டத்தை செய்லபடுத்திய கேணல் சசிகுமார் என்கிற இந்திய ஆமி அதிகாரி கொலை நடந்த சில நாளில் அரியாலை மணியம்தோட்ட பகுதியில் வைத்து விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
நன்றி பதிவு
No comments
Post a Comment