Latest News

August 10, 2020

பிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கப்படுமா ?
by Editor - 0

பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை அகற்ற, முதல் கட்ட நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைக் கமிஷன் ஒன்று பிரித்தானிய அரசால் நிறுவப்பட்டுள்ள நிலையில். அதில் ஆதாரங்களை கொடுத்து தடையை நீக்க, நாடு கடந்த தமிழீழ அரசு பெரும் முயற்சிகளை எடுத்துள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது.

கடந்த 2000ம் ஆண்டு பிரித்தானியாவில் கொண்டுவரப்பட்ட, வெளிநாட்டு பயங்கரவாத  சட்டத்தின் கீழ், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பிரித்தானியா தடை செய்தது. இந்த தடை காலவரையறை இன்றி தொடர்ந்து வருவதோடு. அது அப்படியே நிலைத்து இருக்க சந்தர்பங்கள் உள்ளது. இதனால் எவராவது இந்த முடிவை ஆட்சேபிக்க வேண்டும். அதனை கையில் எடுத்த நாடு கடந்த அரசாங்க உறுப்பினர்கள். டிசம்பர் மாதம் 2018ம் ஆண்டு, பிரித்தானிய உள்துறை அமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார்கள்.


அதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை விலக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தார்கள். இதனை அடுத்து மார்ச் மாதம் 2019 அன்று அந்த கோரிக்கையை மறுத்து உள்துறை அமைச்சர் சாவிட் ஜாவிட் பதில் கடிதம் ஒன்றை அனுப்பினார். இதனை அடுத்து, தனது முடிவை நீதியான முறையில் கொண்டு செல்ல, அவர் ஒரு விசாரணை கமிஷனை ஏற்பாடு செய்தார். தடை செய்யப்பட்ட அமைப்புகள், அதனை விலக்க கோரி முறைப்பாடு செய்யும்(Proscribed Organisations Appeal Commission) அமைப்பில், கடந்த 10 நாட்களுக்கு முன்னர்(ஜூலை 31) அன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

பிரித்தானிய உள்துறை அமைச்சர், பயங்கரவாத நடவடிக்கைகளை கண்காணிக்கும் குழுவிடம்(Joint Terrorism Analysis Centre) தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான தகவல்களை தரும்படி கேட்டிருந்தார். அதற்கு அமைவாக அந்த அமைப்பு 2018ம் ஆண்டு ஒட்டிசுட்டானில் 3 பேர் புலிக்கொடிகளை வைத்திருந்த சம்பவத்தையும். அவர்கள் கைகளில் ஆயுதங்கள் வைத்திருந்தார்கள் என்று, இலங்கை அரசால் தெரிவிக்கப்பட்ட தகவலை எடுத்து, உள்துறை அமைச்சருக்கு கொடுத்து. புலிகள் மீளவும் ஒன்றினைகிறார்கள் என்று தகவல் ஒன்றை கொடுத்துள்ளார்கள்.


இணையங்களில் வந்த செய்தியை ஆதாரமாக வைத்து, புலிகள் இன்னும் ஆயுதங்களோடு இருப்பதாக பிரித்தானிய அரசு கருதுவது பிழை என்று, நாடு கடந்த அரசின் வக்கீல் வாதாடியுள்ளார். அதுபோல இலங்கை அரசு வேண்டும் என்றே இது போன்ற தகவல்களை அடிக்கடி பரப்பி வருவதாகவும், அவர் குற்றம் சுமத்தி வாதாடியுள்ளார். இந்த வாத பிரதிவாதங்கள் கடந்த ஜூலை மாதம் 31ம் திகதி லண்டனில் இடம்பெற்றுள்ளது. இதனை அடுத்து, மேலதிக தேதிகளில் விவாதங்கள் இடம்பெற உள்ளது.

இணையங்களில் வந்த செய்தியை ஆதாரமாக வைத்து, புலிகள் இன்னும் ஆயுதங்களோடு இருப்பதாக பிரித்தானிய அரசு கருதுவது பிழை என்று, நாடு கடந்த அரசின் வக்கீல் வாதாடியுள்ளார். அதுபோல இலங்கை அரசு வேண்டும் என்றே இது போன்ற தகவல்களை அடிக்கடி பரப்பி வருவதாகவும், அவர் குற்றம் சுமத்தி வாதாடியுள்ளார். இந்த வாத பிரதிவாதங்கள் கடந்த ஜூலை மாதம் 31ம் திகதி லண்டனில் இடம்பெற்றுள்ளது. இதனை அடுத்து, மேலதிக தேதிகளில் விவாதங்கள் இடம்பெற உள்ளது.



பிரித்தானிய அரசு புலிகள் தொடர்பாக எடுத்துள்ள முடிவு, ஆதாரமற்றது எனவும். இதனால் தமிழர்கள் சுயமாக செயல்பட இது தடையாக உள்ளதாகவும், நாடு கடந்த தமிழீழ அரசின் வக்கீல் வாதாடியுள்ளார். இறுதியாக ஒரு தமிழ் அமைப்பாவது, பிரித்தானிய அரசின் முடிவை எதிர்த்து, பலமான சவால் ஒன்றை விடுத்துள்ளது

இதற்கு பிரித்தானிய அரசு பதில் சொல்லியே ஆகவேண்டிய கடைப்பாட்டில் உள்ளது. இதனை தமிழர்கள் ஆகிய நாம் வரவேற்க்கவேண்டும். பிரித்தானியாவில் புலிகளுக்கான தடை நீங்கினால் அது தமிழர்களுக்கு கிடைக்கும் பெரும் வெற்றியாக இருக்கும். நாடு கடந்த அரசின் இந்த முயற்சியை பாராட்டாமல் இருக்க முடியாது.

Source : https://www.bindmans.com/news/proscribed-organisation-appeals-commission-hears-appeal-against-ltte-terrrorism-ban


நன்றி அதிர்வு 

« PREV
NEXT »

No comments