Latest News

August 12, 2020

துணைவேந்தர் பதவிக்காக 5 பேர் பேரவைக்கு முன்மொழிவு
by Editor - 0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருப்பவர்களில் இருந்து திறமை அடிப்படையிலும் மதிப்பீட்டின் அடிப்படையிலும், 5 பேர் பேரவைக்கு முன்மொழியப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருப்பவர்களில் இருந்து திறமை அடிப்படையிலும் மதிப்பீட்டின் அடிப்படையிலும் முதல் மூன்று இடங்களைப் பெறுகின்றவர்களின் பெயர்களை ஜனாதிபதியின் தெரிவுக்கென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குப் பரிந்துரைப்பதற்கான, பல்கலைக்கழகப் பேரவையின் விசேட கூட்டம், இன்று (12) நடைபெற்றது.

இதன்போது, விஞ்ஞான பீடம், தொழில்நுட்பப் பீடம் ஆகியவற்றின் முன்னாள் பீடாதிபதியும் கணிதப் புள்ளி விவரவியல் துறையின் முதுநிலை விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜா முதலாமிடத்திலும் உயர்பட்டப் படிப்புகள் பீடாதிபதி பேராசிரியர் கு.மிகுந்தன் இரண்டாமிடத்திலும் வணிக முகாமைத்துவ பீடாதிபதி ரி.வேல்நம்பி மூன்றாமிடத்திலும் பேராசிரியர் அபே குணவர்த்தன தலைமையிலான மதிப்பீட்டுக்குழுவால் முன்மொழியப்பட்டுள்ளனர்.

இத்தடன், முன்னாள் துணைவேந்தரும் கணிதப் புள்ளிவிபரவியல் துறையின் முதுநிலை விரிவுரையாளருமான பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் நான்காவது இடத்திலும், மருத்துவ பீடாதிபதி மருத்துவ நிபுணர் எஸ். ரவிராஜ் ஐந்தாவது இடத்திலும் முன்மொழியப்பட்டுள்ளனர்.

புள்ளிவிவரவியல் துறைப் பேராசிரியர் செ. இளங்குமரன்,   மதிப்பீட்டுக் குழுவால்  நிராகரிக்கப்பட்டுள்ளார். 

முதல் மூன்று இடங்களையும் பெற்றவர்களின் திறமைப் பட்டியல், பல்கலைக்கழகப் பேரவையின் பரிந்துரையுடன், தகுதி வாய்ந்த அதிகாரியினால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு, நாளைய தினம் (13) அனுப்பி வைக்கப்படும்.
« PREV
NEXT »

No comments