கொரோனாவின் மிக மோசமான தாக்கம் இனிமேல் தான் ஏற்படப் போகிறது என உலக சுகாதார நிறுவனம் கடுமையாக எச்சரித்துள்ளது.
கொரோனா வைரஸின் பாதிப்பு சீனாவில் தென்படத் தொடங்கி ஆறு மாதங்கள் ஆன நிலையில் உலக அளவில் இதுவரை ஒரு கோடி பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்துப் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானோம்,
உலக நாடுகளிடையே ஒருங்கிணைப்பு இல்லையென்றும், நாடுகள் பிரிந்து நிற்பது வைரஸ் பரவலுக்கு உதவுவதாகவும் கூறியுள்ளார்.
தற்போதுள்ள சூழலை வைத்துப் பார்க்கும்போது கொரோனாவின் மிக மோசமான தாக்கம் இனிமேல் தான் ஏற்படப் போகிறது என்று எச்சரித்துள்ள டெட்ராஸ், கொரோனா வைரஸின் தொடக்கம் குறித்து ஆராய அடுத்த வாரம் சீனாவிற்கு குழு ஒன்றை அனுப்பவிருப்பதாகக் கூறியுள்ளார்.
No comments
Post a Comment