கருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும்!!! அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும்.!!
இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள்!!!
(#இதுவொரு_மீள்_பதிவாகும்)
கடந்த சில தினங்களுக்கு முன் தமிழகத்தின் "புதிய தலைமுறை" தொலைக்காட்சியில் ஒரு நேர்காணலில் கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் தனது ஈனத்தமான உளறல்கள் மூலம் தன்னுடைய கபட நிலையை வாரி கக்கியிருந்தார்.
அந்த நேர்காணலில் இறுதி யுத்ததில் இலங்கை இராணுவம் அரங்கேற்றிய யுத்தக் குற்றங்கள் பற்றியும், சில வெளிவராத தகவல்கள் பற்றியும், விடுதலைப் புலிகளின் தலைமையைப் புகழ்ந்தும் காலம் கடந்து தன்னுடைய எதிர்கால அரசியலை தக்க வைத்துக் கொள்வதற்காக உளறியிருக்கிறார்.
அவரது கோமாளித்தனமான நேர்காணலை... விடுதலைப் புலிகளின் தலைமையையும், விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாறுகளையும் முழுமையாக அறிந்த எந்தவொரு தமிழனும் ஏற்றுக் கொள்ளமாட்டான்.!! விடுதலைப் புலிகளின் சுயகட்டுப்பாடு, தனிமனித ஒழுக்கம், கடமையுணர்ச்சி, தலைமைக்கு கீழ்படிதல் இன்னும் பல தனித்துவமிக்க குணங்களை உலகத் தமிழருடன் சர்வதேசம் கூட அறிந்தே வைத்துள்ளது. ஏன், சிங்கள மக்கள் கூட புலிகளை இன ரீதியாக எதிர்த்தாலும், விடுதலைப் புலிகளின் தலைவர் மீதும் போராளிகள் மீதும் வேறு எந்தவிதமான அவதூறுகளையும் பரப்பியதில்லை என்பதே வரலாற்று உண்மையாகும்.
அவ்வாறு கட்டுக்கோப்புக் குலையாத விடுதலைப் புலிகள் அமைப்பின் புனிதத்தை, நிறம் மாறும் பச்சோந்திகள் வந்து படங்கள் போட்டுக் காட்டுவதால், அந்தப் பச்சோந்திகளை எந்தவொரு உண்மைத் தமிழனும் நம்பிடப் போவதில்லை!!
"கருணா...!!" தமிழ் இனத்தின் சாபக்கேடு!!! தமிழினத்தில் பிறந்த ஏழரைச் சனியன்.!! தமிழினம் அழியும் வரை "துரோகி கருணா" என்ற பெயர் வரலாற்றில் என்றுமே அழியாது!! எவரும் அழிக்கவும் முடியாது.!! முள்ளிவாய்க்கால் மண்ணில் இரத்தம் சிந்தி மடிந்து புதையுண்டு போன ஒவ்வொரு தமிழனின் ஆத்மாவும் சாபமிட்டு தூற்றிக் கொள்ளும்.... கருணா என்ற ஈனத் துரோகியை!!!
விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து தான் ஏன் பிரிந்தேன் என்பதை... தன்னுடைய கீழத்தரமான தவறுகளை மறைத்து விடுதலைப் புலிகள் தலைமை மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி தான் ஒரு யோக்கியன் என்று தான்தோன்றித்தனமாக விளாசித் தள்ளியுள்ளார்.
உண்மையிலேயே... கருணா, விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற காரணத்தை பலரும் அறிந்திருந்தாலும்... தற்போதைய இந்த நேர்காணலைப் பொறுத்தவரையும் மீண்டும் நினைவு படுத்த வேண்டிய அவசியம் ஏற்படவே செய்கிறது.
உண்மையிலேயே... கருணா, விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து ஏன் பிரிந்தார்???
இதற்குரிய முழுமையான காரணத்தை இங்கே எழுத ஆரம்பித்தால்... இங்குள்ள இடம் போதாது! ஆகவே, சுருக்கமாக எழுத முற்படுகிறேன்.
விடுதலைப் புலிகளின் தோற்றத்திற்கு முன்னர்... இலங்கைத் தமிழர்களிடையே சாதிப்பிரச்சனைகள், மதப்பிரச்சனைகள் (மதப்பிரச்சனைகள் மிகவும் அரிதாகவே இருந்தது) உட்பட பிரதேசவாதப் பிரச்சனைகள் போன்றன மிகவும் அதிகமாகவே இருந்தன. இதை எவரும் மறுக்க முடியாது!! பிரதேசவாதப் பிரச்சனையால்... ஒரு சில ஊர்களையும், சில மாவட்டங்களையும் தாழ்த்தியும், குறைத்தும் மட்டந்தட்டி வந்தார்கள் சில அரசியல் சார்ந்த தமிழர்கள்.
விடுதலைப் புலிகள் தோற்றம் பெற்ற பின்னர்... தாய்நாட்டின் விடுதலைக்கான போராட்ட சூழல்களே தமிழர் பிரதேசம் எங்கும் பெருமளவு வியாபித்திருந்தமையால்... மேற்கண்ட பிரச்சனைகள் மறைந்து சிங்களம் என்ற பேரினவாதத்தை எதிர்த்துப் போராடி தமிழீழத் தனியரசு ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதே அனைத்துத் தமிழர்களது மனங்களிலும் பிரதிபலிப்பாக இருந்தது. அந்தப் புனிதம் நிறைந்த நீதியான விடுதலைப் போராட்டத்தால் சாதியப் பிரச்சனைகள், மதப்பிரச்சனைகள், பிரதேசவாதப் பிரச்சனைகள் அனைத்தும் மறந்தே போயின...
தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் சாதிப் பாகுபாடுகளை தனது உயரிய சிந்தனைகளாலும், விவேகமான செயற்பாடுகளாலும் இல்லாதொழித்தார் என்பதே வரலாற்று உண்மையாகும்! அது மட்டுமல்லாமல் ஆண், பெண் இருபாலரும் சமனானவர்கள் என்ற அடிப்படையில் சமூகம் மீது மிகுந்த அக்கறையும், கட்டுப்பாடும் கொண்டவர். அவர் வழி வந்த மக்களும் அவ்வாறே..!
சரி, நாம் கருணா பற்றிப் பார்ப்போம்....
கருணா, விடுதலைப் புலிகள் அமைப்பில் சேர்ந்த ஆரம்ப காலத்தில் தலைவரோடு தலைவரின் கண்காணிப்பிலேயே வளர்ந்ததனால் அளவு கடந்த நம்பிக்கையையும், அன்பையும் தேசியத் தலைவர் அவர்கள் கருணா மீது வைத்திருந்தார். இந்த நம்பிக்கையின்பால் அந்தக்காலப் பகுதியில் தலைவரின் பாதுகாவலர்களில் ஒருவராகவும் இருந்தார்.
ஒரு சில போர் அனுபவங்கள் மூலம் மூத்த தளபதிகளில் ஒருவராக வலம் வந்த கருணா மீது, தலைவர் அதீத நம்பிக்கை வைத்திருந்த காரணத்தாலும், மட்டக்களப்பில் பிறந்த காரணத்தாலும், மட்டக்களப்பை அண்டியுள்ள காட்டுப் பகுதிகளை நன்கு அறிவார் என்ற காரணத்தாலும் கிழக்கு மாகாணத்தின் முதன்மைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
தேசியத் தலைவர் அவர்களும்... தான் வளர்த்த பிள்ளை என்பதால் விடுதலைப் புலிகளின் விதிமுறைகளை மீறாமல் கிழக்கு மாகாணத்தில் சுதந்திரமாகச் செயற்படுவதற்கு கருணாவிற்கு அனுமதியளித்திருந்தார். அந்தச் சுதந்திரம் என்பது அவரது அடி மனதிற்குள் பல ஆசைகளுக்கு தூபமிட்டது.!!
கருணா பங்கு பற்றிய போர் சம்மந்தாமான இராணுவ விபரங்களைப் பற்றி இரண்டு தினங்களுக்கு முன்பு மதிப்பிற்குரிய திரு. ஈழத்து துரோணர் அண்ணா அவர்கள் விரிவாக எழுதியிருந்தார். ஆகவே, அதுபற்றிய விபரங்கள் இங்கே தேவையற்றது என நினைக்கிறேன்.
வன்னியில் இருந்த தலைமையோடு தேவைக்கேற்ப நேரடியாகச் சந்தித்து தலைமையின் நேரடிக் கட்டளைக்குக் கீழ் செயற்பட வடபிராந்தியம் முழுவதுமுள்ள தளபதிகள் சில குறிப்பிட்ட முக்கிய போராளிகளால் இலகுவில் முடிந்தது. தலைவராலும் நினைத்தவுடன் சந்திக்க முடிந்தது. ஆனால், கிழக்கு மாகாணத்தில் உள்ள கருணாவிற்கு. அவ்வாறு இலகுவாக சந்திக்கும் வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருந்தது. மிகவும் அவசரம் என்றால் மட்டுமே காட்டு வழியூடாக பயணமாகி பல வாரங்களின் பின் வன்னி வந்து தலைவரைச் சந்திக்க முடியும்.
மேற்கண்ட காரணங்களை வைத்தே விடுதலைப் புலிகளின் விதிமுறைகளை மீறாமல் சுதந்திரமாகச் செயற்படுவதற்கு கருணாவிற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இக் காரணங்களைச் சாதகமாகப் பயன்படுத்திய கருணா, தமிழர்களால் போற்றப்படும் தலைவரின் உயரிய எண்ணங்களை களங்கப்படுத்தும் விதமாகவும், விடுதலைப் புலிகளின் கொள்கைகளை மீறும் செயலாகவும், தனது கட்டுப்பாட்டிலேயே கிழக்குப் பிராந்தியம் முழுவதும் இருப்பதால் தனது ஆளுகைக்குட்பட்ட பிராந்தியத்தில் தலைமைக்குத் தெரியாமல் மிகவும் ரகசியமாக பல திட்டங்களை செயல்படுத்தி வந்தார்.
ஏற்கனவே கருணாவிற்கு பிரதேசவாதம் மீது நாட்டம் உண்டு என்பதனால் ஒரு சில தளபதிகள் தன்னை ஒதுக்குவதாக தவறாக நினைத்துக் கொண்டு முரண்பட்டுள்ளார். உண்மையிலேயே தலைவரிடம் இப் பிரச்சனையைத் தெரியப்படுத்தி இருந்தால் அவர் தீர்த்து வைத்திருப்பார். தலைவர் அனைத்துப் போராளிகளையும் தனது பிள்ளைகள் என்றே கருதுபவர். மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சில போராளிகளை தனக்கு அருகிலேயே தனது பாதுகாவலராக அழகுபடுத்தி வைத்திருப்பவர். கருணாவின் பிரதேசவாதப் பிரச்சனை தெரிந்தும் சம்மந்தப்பட்ட தளபதிகள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், அவரின் அடி மனதிலிருந்த அழுக்குகளை அவ்வேளையில் யாராலும் உணரமுடியவில்லை. கிழக்குப் பிராந்தியமும், வன்னிப் பிராந்தியமும் தனித்தனியாக இருந்தமையும் மற்றொரு காரணம்.
இவ்வாறான காரணங்களை அறிந்து கொண்ட கருணா, தனக்கு விசுவாசமான ஒரு சில கீழ்நிலைத் தளபதிகளையும். ஒரு சில போராளிகளையும் அழைத்து "மட்டக்களப்பு மாவட்ட போராளிகள்" பிரதேசவாத ரீதியாக ஒதுக்கப்படுவாதாக ஒரு போலியான பிம்பத்தை அவர்களின் மனதில் பதியும்படி செய்தார். அத்தோடு, வன்னியில் உள்ள போராளிகளுக்கே அதிகாமான சலுகைகள் வழங்கப்படுவதாகவும் ஒரு பொய்யான தோற்றப்பாட்டையும் உருவாக்கினார். ஆனால், ஒரு சில போராளிகளைத் தவிர மற்றைய போராளிகள் இவரது கூற்றுக்களை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களது மனதில் தேசியத் தலைவர் அவர்களே மனங்கவர்ந்த தலைவராக இருந்தார்.
அத்தோடு நின்றுவிடாமல்... தனது கட்டுப்பாட்டில் உள்ள கிழக்குப் பிராந்தியத்தில் தனது படைப்பிரிவில் உள்ள போராளிகளிடத்திலே தனியாக கடற்பிரிவு, புலனாய்வுப் பிரிவு, நிதிப்பிரிவு, அரசியற்பிரிவு மற்றும் மருத்துவப் பிரிவு என பல பிரிவுகளை தான்தோன்றித்தனமாக உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார். மேலும் தனக்கு விசுவாசமான ஒரு சில போராளிகளை சமாதான காலத்திலே மிகவும் ரகசியமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்து படகு கட்டுமானங்களையும் கற்க வைத்தார்.
மேற்சொன்ன காரணங்களோடு நின்று விடாமல் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் செல்வந்தர்களை ரகசியமாக மிரட்டி பெருமளவு பணங்களையும் பெற்று வந்தார். அந்தப் பணங்களை வைத்து வெளிநாடுகளில் தொழில் முதலீடுகளையும் செய்து வந்தார்.
விடுதலைப் புலிகளின் அமைப்பில் நிதிக் கையாளுகை, நிதிப் பங்கீடு என்பன துறை சார்ந்ததாகவும், படைப்பிரிவுகள் சார்ந்ததாகவும் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் ஏற்ப வகையில் அந்தந்த மாவட்டம் துறைகள் சார்ந்த தளபதிகள் அனைவரும் ஒன்று கூடியே எவ்வளவு நிதி வேண்டுமென முடிவெடுப்பார்கள். (தளபதிகள் இல்லாத பட்சத்தில் கீழ்நிலைத் தளபதிகள் பங்கேற்பார்கள்) அந்த வகையில் எந்தவிதக் குறையுமின்றி தலைவரின் அனுமதியுடன் நிதிப்பிரிவு பொறுப்பாளர் தமிழேந்தி அப்பாவால் வழங்கப்படும். மாத இறுதியில் முழுமையான கணக்கறிக்கை சமர்பிக்கப்பட வேண்டும்.
மேலதிக செலவுகள் செய்தாலும்... அப்பணம் எப்படி எங்கிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டது என ஆதாரத்துடன் முழுமையான அறிக்கை கொடுக்க வேண்டும். இந்த மேலதிக செலவு விடயத்தில்தான் கருணா சிக்க வேண்டிய நிலை உருவாகியது.
மேலதிக செலவு விபரங்களை கணக்கறிக்கை காட்டாமல் பல மறைமுகமான தொழில்களை உருவாக்கி பல கோடிகளை இலாபமாக பெற்று வந்தார். ஏற்கனவே பிரதேசவாதம் அவரது ஆழ்மனதில் தீயாக எரிந்து கொண்டிருந்தமையால்... இவையனைத்தையும் மனதில் வைத்து கிழக்குப் பிராந்தியம் முழுவதும் தனது கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் எனவும்... தனது பிரிவில் உள்ள போராளிகள் தனது கட்டுப்பாட்டிலும்... தான்மட்டுமே தலைவரின் கீழ் செயற்பட வேண்டும் என்ற எண்ணத்துடனேயுமே பல அடித்தளங்களையிட்டு வந்தார்.
இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்காக பல நாடுகளுக்குச் செல்ல வேண்டிய சூழல் கருணாவிற்கு ஏற்பட்டது. அந்த நேரத்திலும் தேசியத் தலைவர் அவர்கள் கருணா மீது அளவு கடந்த அன்பினையும், நம்பிக்கையுமே வைத்திருந்தார். கடுகளவும் ஒதுக்கவேயில்லை... பத்திரிகையாளர் சந்திப்பிலிருந்து கருணா பிரியும் வரை கருணாவிற்கு முக்கியத்துவம் கொடுத்து தன் நெஞ்சத்தில் வைத்து முன்னிலைப்படுத்தி சர்வதேசம் முழுவதும் பேரும், புகழும் அடையும்படி உருவாக்கியிருந்தார். தான் வளர்த்த பிள்ளைகளை எந்தவொரு தாயும் பாகுபாடு பார்த்து ஒதுக்குவதில்லை. அதேபோல்தான் தேசியத் தலைவரும் தான் வளர்த்த பிள்ளைகளை ஒருபோதும் பாகுபாடு பார்த்து ஒதுக்கியதில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் அதற்கு இடமுமில்லை!!!
சமாதான காலத்தில் சீரான போக்குவரத்து இருந்தமையால் கருணாவிடம் பணம் பறி கொடுத்த ஒரு சில மக்களும்... இவரது பிரதேசவாதம் மற்றும் தனி நிர்வாகம் பற்றி அறிந்த சில போராளிகளும் வடபிராந்தியத்தின் ஒரு சில தளபதிகள் ஊடாக தலைவருக்குத் தெரியப்படுத்தினார்கள். இவ்வேளையில் மேலதிகமாகப் பெற்றுக் நிதி கணக்கினை முறையாக கட்டாத பட்சத்திலேயே கருணா மீதான நிதி மோசடியை தமிழேந்தி அப்பா தலைவரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இதைப்பற்றி விசாரிப்பதற்காகவே தலைவர் அவர்கள், கருணாவை வன்னிக்கு வந்து தன்னைச் சந்திக்குமாறு அழைப்பு விடுத்தார்.
இதனாலேயே தன்னை மாட்டிவிட்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காக தமிழேந்தி அப்பா மற்றும் சில தளபதிகளையும் பின்னாளில் விசாரனைகளை மேற்கொண்ட பொட்டு அம்மான் அவர்களையும் மிகவும் கடுமையாக கருணா விமர்சித்தார்.
தன்னை எதற்காக தலைவர் அழைக்கிறார் என நன்றாகப் புரிந்து கொண்ட கருணா... மேலும், தன்னுடைய பிரதேசவாதம், தனிநிர்வாகம் மற்றும் சில மறைமுகமான விடயங்களும் தெரிந்துவிடும் அதனால், தான் தண்டிக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாகவும், விடுதலைப் புலிகளின் விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் மீறினால், மாத்தையாவிற்கு ஏற்பட்ட நிலையே தனக்கும் ஏற்படலாம் என்ற பேரச்சம் காரணமாகவும் தலைவரை சந்திக்காமல் பதற்றத்துடன் திகைத்துப் போய் தவிர்த்து இருந்தார்.
விடுதலைப் புலிகளின் விதிமுறைகளை மீறினால் சாதாரண போராளிகள் முதல் பெரும்நிலை தளபதிகள் என அனைவருக்கும் ஒரே விசாரனை... ஒரே தண்டனைதான். மிகவும் ஒழுக்கமான, இறுக்கமுடைய கட்டுப்பாடுடனேயே புலிகள் அமைப்பு இயங்கி வந்தமையால் மிகவும் பலம் வாய்ந்த ஒரு அமைப்பாக உருவாகி தனியான ஒரு அரசங்கத்தை நடாத்தி மக்களின் மனங்கவர்ந்த வீரப்புருசர்கள் ஆனார்கள்.
இவ்வாறு இருக்க... தன்னை எவ்வாறாயினும் தனது இடத்தில் வைத்தே புலனாய்வுப் பிரிவு போராளிகள் ஊடாக கைது செய்ய பொட்டம்மான் முயற்சிப்பார் என்பதை அறிந்திருந்த கருணா, தமிழர் பிரதேசங்களில் எங்குமே ஓடி ஒழிந்து கொள்ள முடியாது என்பதனால்... என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றார். இவ்வேளையில்தான் சமாதான காலத்தில் வெளிநாடு சென்றுவரும் வேளைகளில் பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றிய சிங்கள அமைச்சரான மிலிந்த மொறகொட மற்றும் ஒரு சில அமைச்சருடன் ஏற்கனவே நல்ல நட்பை பேணிவந்தார். இவ்வேளையில் அவர்களின் நினைவு வரவே அவர்களுடன் பேசி தனக்குப் பாதுகாப்புத் தரும்படி கெஞ்சினார்.
அவர்களும் இராணுவத்துடன் பேசி கிழக்கு மாகாணத்தில் உள்ள மிகப்பெரிய பாதுகாப்பு நிறைந்த "மின்னேரியா" இராணுவ முகாமிற்குள் ஒருசில சகாக்களுடன் தங்கியிருப்பதற்கான அனுமதியைப் பெற்றுக் கொடுத்தார்கள்.
விமானப் படையின் உலங்கு வாணூர்தி ஊடாக அழைத்துச் செல்லப்பட்ட கருணாவும் ஒருசில சகாக்களும் மின்னேரியா முகாமில் பல சுகபோகங்களுடன் மிதந்தார்கள்.
பின் குள்ளநரி ரணில் முக்கிய இராணுவ அதிகாரிகளுடன் சேர்ந்து பல சூழ்ச்சிகள், பல தந்துரோபாயங்கள் மூலம் கருணாவை தங்களது சதி வலைக்குள் விழ வைத்து கருணாவின் கனவான தனியான நிர்வாகம், பிரதேசவாதம் போன்றவற்றிற்கு துணையிருப்பதாக ஆசை வார்த்தைகளைக் கூறி தங்களை விட்டு விலகாத மாதிரி பாலியல் ரீதியாகவும் கருணாவை வளைத்துப் போட்டார்கள், ரணிலும் இராணுவ அதிகாரிகளும்.!!
ரணில் மற்றும் இராணுவத்தின் சதி வலைக்குள் விழுந்த கருணா... விடுதலைப் புலிகள் மீது அவதூறுகளைப் பரப்பி விடுதலைப் புலிகளின் தலைமையின் போக்கு தனக்குப் பிடிக்காமலேயே தனியாக பிரிந்து செல்வதாகக் கூறி தனக்கு விசுவாசமான சகாக்களுடன் "தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்" என்றொரு பிரிவுடன் சிங்கள அரசோடு கூட்டுச் சேர்ந்தார். மற்றவை அனைவரும் அறிந்ததே.
இருந்தும் கருணா செய்த மிகப்பெரிய தேசத் துரோகங்கள் பின்வருமாறு...
கடந்த சில தினங்களுக்கு முன் "புதிய தலைமுறை" தொலைக்காட்சியின் நேர்காணலில் தனது அரசியல் தோல்வியின் காரணமாக நிறம் மாறும் பச்சோந்தியாக மாறி கண்டபடி பிதற்றியிருக்கிறார். அவரின் நேர்காணலலை உள்வாங்கிக் கொண்டு....
இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகள் மக்களை கேடயமாகப் பயன்படுத்தினார்கள் என்றும் மக்களோடு மக்களாக வந்து தற்கொலைத் தாக்குதல் மேற்கொண்டார்கள் என்றும் இதுவே விடுதலைப் புலிகள் செய்த மிகப்பெரிய போர்க்குற்றம் எனவும் இலங்கை அரசவாதங்களுக்கு பலம் சேர்க்கும் வகையில் ஊளையிட்டிருந்தார்.
ஆனால், இறுதி யுத்தத்தில் உண்மையில் நடந்ததோ வேறு.!!!
கருணாவிற்கு மிகவும் நெருக்கமான அதுவும் வன்னிப் பிராந்தியம் முழுவதும் அறிந்த கருணாவின் சகாக்கள் கருணாவின் வழி காட்டலின்படி இலங்கை அரசால் விலைக்கு வாங்கப்பட்டார்கள். பின்பு அவர்களை இறுதி யுத்தத்தின் போது பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டு நல்லதொரு சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தார்கள் சிங்கள இராணுவ அதிகாரிகள்.
அவ்வேளையில்தான் மக்கள் பாதுகாப்பான முறையில் வெளியேறிச் செல்வதற்காக விடுதலைப் புலிகள் தாக்குதலை நிறுத்தி சில சில பகுதிகள் ஊடாக வழி விட்டிருந்தார்கள். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கும் இடையில் உள்ள பகுதி சூனியப் பிரதேசம் ஆகும். இந்தச் சூனியப் பிரதேசத்திற்குள்ளேயே கருணாவின் சகாக்களானவர்கள் ஓரிரு இராணுவத் தளபதிகள் மற்றும் ஒரு சில வீரர்களைத் தவிர மற்றவர்களுக்குத் தெரியாமல் மிகவும் ரகசியமாக மறைவாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தார்கள்.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் மக்கள் நெருங்கவும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து விடுதலைப் புலிகளே சுடுவது போல் கருணாவின் சாகாக்கள் மக்களைச் சுட்டு படுகொலை செய்து கொண்டிருந்தார்கள்.!! பின் ஒரு சிலரை மட்டுமே தப்ப விடுவது போல் செய்து, தப்பியவர்களை வைத்தே ஊடகங்கள் ஊடாக சர்வதேசத்திற்கு "புலிகள் வெளியேற விடாமல் தடுத்தார்கள். மீறியவர்களை சுட்டுக் கொன்றார்கள்" என்று ஒரு வீண்பழியை புலிகள் மீது சுமத்தி இன்னும் இன்னும் விடுதலைப் புலிகளை இறுக்குவதற்கும்.!! மற்றும் சர்வதேச உதவியுடன் புலிகளை முற்றாக அழித்தொழிப்பதற்கும் கருணாவே முக்கிய துணையாக நின்றார்.
இவ்வாறான பல இழிவான செயல்களை கருணாவால் அனுப்பப்பட்ட சகாக்களே நிறைவேற்றினார்கள். இராணுவத்தோடு சேர்ந்து மக்களையும் அருகிலிருந்து அழித்தார்கள்.
கருணா, சிங்களப் படைகளுக்கு முக்கிய துணையாக இருந்தமைக்கான மிகவும் முக்கியமான காரணம் என்னவெனில்... விடுதலைப் புலிகள் இருந்தால் தான் நிச்சயமாக கொல்லப்படுவேன் என்ற மிகப்பெரிய உயிர்ப் பயமே!!!
தனது ஒற்றை உயிருக்காக ஒரு இனத்தையும், ஒரு புனிதமான விடுதலைப் போராட்டத்தையும் அழித்து தமிழீழ தனியரசு உருவாக இருந்த வேளை அதையும் கனவாக மாற்றிய மிகப் பெரிய தேச இனத் துரோகிதான் இந்தக் கருணா!!! இவ்வாறான ஒரு கேவலமான உயிர் இத்தேசத்தில் உலாவத்தான் வேண்டுமா..????
தற்கொலைக் குண்டுத் தாக்குதலானது... தமது உயிரைப் பாதுகாக்க பயத்துடனும், பரபரப்புடனும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் ஓடிய மக்களின் கைப் பொதிகளில் தாணியங்கிக் குண்டுகளை வைத்து விட்டு. சற்றுத் தொலைவில் இராணுவத்தினருடன் இருந்து கொண்டு Remote Control மூலம் இராணுவச் சோதணைகளுக்கு உட்படுத்தப்படும்போது அழுத்தி வெடிக்க வைத்து அப்பாவி மக்களையும் கொலை செய்தது மட்டுமின்றி தமக்கு அருகில் வருகின்ற பொது மக்களையும் பயத்தில் சுட்டுக் கொலை செய்யும் மன நிலையையும் இராணுவத்திற்கு வழி சமைத்துக் கொடுத்தது கருணாவின் சகாக்களே.!!! இதுவே இலங்கை இராணுவத்திற்கு கருணா துணை போன பெரும் இனத்துரோகமாகும்!!!
மற்றது மக்களை கேடயமாகப் பயன் படுத்தியது.
கருணா, தான் கிளிநொச்சியிலும், யாழ்ப்பாணத்திலும் யுத்தம் புரியும் போது மக்களை பாதுகாப்பாக வேறு இடங்களுக்கு நகர்த்தியதாகவும்... ஆனால், இறுதி யுத்தத்தில் விடுதலைப் புலிகள் மக்களை கேடயமாகப் பயன்படுத்தினார்கள் என்றும் அப்பட்டமாக பழி சுமத்துகிறார். உண்மையிலேயே கருணா ஒரு படு முட்டாள் என்றுதான் கூற வேண்டும்.
யாழ்ப்பாணத்திலிருந்து, அனைத்து மக்களும் வெளியேறவில்லை 60 வீதமான மக்களே புலிகளோடு புலிகளின் பகுதியான வன்னிக்குச் சென்றார்கள். கிளிநொச்சியிலிருந்து மக்களை வெளியேற்றும் போது அந்த யுத்தகளமானது வேறு வகையானது அதுமட்டுமல்லாமல் பல திட்ட நகர்வோடு மேற்கொள்ளப்பட்ட விடுதலைப் புலிகளின் இராணுவ நடவடிக்கை என்பதால், முன்கூட்டியே தமது கட்டுப்பாட்டிற்குள் உள்ள மற்றைய பிரதேசத்திற்குள் மக்களை பாதுகாப்புடன் நகர்த்தினார்கள்.
ஆனால், முள்ளிவாய்க்கால் யுத்தமானது அவ்வாறில்லை. ஒரு வீட்டைச் சுற்றி பலர் தாக்கும் போது வீட்டிற்குள் உள்ள பாதுகாப்பன பகுதிகளுக்குள்தான் பாதுகாப்புத் தேடிக் கொள்வார்களே தவிர தாக்குபவர்களின் திசையை நோக்கி எவரும் ஓடமாட்டார்கள். அதுபோல்தான் மிகவும் கொடியது முள்ளிவாய்க்கால் யுத்தமும். பல தசாப்தங்களாக பல யுத்தங்களூடாக விடுதலைப் புலிகளையே வீரப் புருசர்களாக, பாதுகாவலர்களாக ஏற்றுக் கொண்டு எல்லாச் சூழ்நிலையிலும் அவர்களுக்குப் பக்கத்திலேயே இருந்த மக்கள் எப்படி இராணுவத்தின் காட்டுப்பாட்டிற்குள் போக விரும்புவார்கள்..?
மற்றம், சமாதான காலத்தின் பின்னர் வன்னியில் வாழ்ந்த 80 வீதமான மக்களை இலங்கை அரசானது புலிகளாகத்தான் கணித்தார்கள். காரணம், அங்கே இருந்த மக்கள் அனைவரும் புலிகளோடு ஒன்றோடு ஒன்றாகவே மிகவும் நெருக்கமாகவே இருந்தார்கள். அப்படியான மக்களை இலங்கை இராணுவத்தினர் இருகை கூப்பி வரவேற்பார்களா.??? தமிழர்களும் இலங்கை இராணுவத்தின் அட்டூழியங்களை அறியாதவர்களா என்ன..???
இருந்தும் இறுதி யுத்தத்தில் எதையும் எதிர்பார்க்காத மக்கள், நிலைமை மிகவும் மோசமாகி இறுகிக் கொண்டு வரவே கண்ணெதிரே உறவுகள் ஒவ்வொன்றாக மடிந்து வர மிகவும் விரக்தியான நிலையிலேயே உயிரைப் பாதுகாக்க தன்னிலை மறந்து இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் சென்றார்கள்.
எந்த யுத்ததிலும் பொது மக்களை விடுதலைப் புலிகள் கேடயமாகப் படுத்தியதில்லை. மாறாக பல தசாப்தங்களாக பொதுமக்களே யுத்த களத்திலே நேரடியாக நின்று பல வகையான உதவிகளைச் செய்து வந்தார்கள். ஓயாத அலைகள் 1 முதல் 4 வரை நடந்த யுத்தங்களில் மக்களே விடப்பிடியாக வலிந்து சென்று பல வகையான உதவிகளைப் புரிந்தார்கள்.
இதனாலேயே வன்னியில் வாழ்ந்த மக்கள் புலிகளாகக் கருதப்பட்டு மிகவும் கொடூரமாக பழி வாங்கும் அளவுக்கு திட்டம் போட்டு அழிக்கப்பட்டார்கள். நடந்த இனப்படுகொலையிலிருந்து இலங்கை அரசைக் காப்பாற்றவே கருணா துணையிருந்து மிகப் பெரிய துரோகம் செய்தார்.
தற்போது... இல்லாத ஒரு புரட்சியை உருவாக்கி தமிழர்களைப் பாதுகாக்க போலியாகத் துடிக்கும் கருணாவிடம் சில கேள்விகள்....
■ தேசியத் தலைவர் அவர்கள் அவரது வாயால் ஒருபோதும் தன்னை துரோகி என்றோ, வேறு விதமாகவோ விமர்சனங்கள் எதுவுமே சொல்லவில்லை என்று அடித்துக் கூறும் கருணா, தலைவரின் அழைப்பை ஏற்று நேரடியாகச் சென்று விளங்கப்படுத்தி ஒரு தீர்வு கண்டிருக்கலாமே? ஏன் அவ்வாறு செய்யவில்லை??
தான் செய்த துரோகங்கள் தெரிந்து மாத்தையா போல் தனக்கும் அதே நிலை ஏற்படும் என்ற அச்சம்தானே காரணம்??!!
■ சரி, தமிழர்களின் நலனில் அக்கறை உள்ளவரெனில் பிரிந்து சென்றபின் தனியாகவே நின்று அரசியலில் ஈடுபட்டிருக்கலாமே.?? ஏன், தமிழர்களின் எதிரி இனமான சிங்களத்துடன் கூட்டுச் சேர வேண்டும்???
■ பெரிதாக எதுவுமே தெரியாத போராளிகளை இராணுவம் கைது செய்தாலே... அந்தப் போராளிகள் மூலம் விடுதலைப் புலிகள் பற்றிய ரகசியம் தெரிந்து கொள்ள பல வகையான துன்புறுத்தல்களை ஏற்படுத்துவார்கள். அவ்வாறு இருக்கையில் விடுதலைப் புலிகள் பற்றி பல விடயங்கள் அறிந்தும், ஒரு முதன்மைத் தளபதியாக இருந்தும் கிழக்கு மாகாணம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த கருணா, தங்களுடன் ஒட்டிக் கொள்ளும் போது கொஞ்சிக் குலாவ... இலங்கை இராணுவம் என்ன முட்டாள்களா?
ஆனால், தான் விடுதலைப் புலிகளைக் காட்டிக் கொடுக்கவில்லை என்றும், விடுதலைப் புலிகள் பற்றிய எந்தத் தகவல்களையும் வழங்கவில்லை என்றும் முழுப் பூசணிக்காயை சோற்றில் புதைக்கிறார்.
■ மகிந்தாவின் கட்சியில் மகிந்தாவிற்கு அடுத்த பிரதித் தலைவராக தானே இருப்பதாக சகவாசமாக கூறியுள்ளார்!!! போதாக் குறைக்கு... இதுவரையும் எந்தத் தமிழனுக்கும் கிடைக்காத உயர் பதவி என்றார். (பதவி மோகத்தில்)
வளர்த்துவிட்டு பெரும் செல்வாக்கும், புகழும் பெற்றுத் தந்த தாய்க்கு நிகரான தேசியத் தலைவருக்கே துரோகம் இழைத்து, தமிழர்களின் எதிரியான தம் கூட்டத்தோடு சேர்ந்த கருணாவை தனக்கு அடுத்த தலைவராக நியமிப்பதற்கு மகிந்தா ஒரு மடையரா? சுதந்திரக் கட்சியில் உள்ள அடுத்தநிலை தலைவர்களெல்லாம் கண்டு கொள்ளாமல் இருக்க அவர்கள் எல்லாம் என்ன மூடர்களா.??
வளர்த்த தாய்க்கே துரோகம் இழைத்தவர் தனக்கும் துரோகம் இழைக்காமல் இருப்பார் என்ற நம்பாமலா கருணாவை பிரதித் தலைவராக்கினார் மகிந்தர்.???
அல்லது சுதந்திரக் கட்சியின் தலைவர் என கருணா பிதற்றுவதெல்லாம் பொய்யானதா.??
■ மகிந்தாவோடு நக்கித் திரியும்போது மகிந்தா சிறந்த தலைவர் எனவும், இலங்கையில் வாழும் மக்கள் அனைவரும் ஒருதாய் பிள்ளைகள் எனவும் கொக்கரித்து திரிந்துவிட்டு... மகிந்தா ஜனாதிபதி தேர்தலில் படுதோல்வி அடைந்தபோது எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்து விட்டு, தற்போது கடந்த பாரளுமன்றத் தேர்தலில் மகிந்தாவும் அவரது சகோதரர்களும் அரசியலில் நிராகரிக்கப்பட்டு முழுமையாக ஓரங்கட்டப்பட்டபின் செத்த பாம்பிற்கு தான் பயப்பட மாட்டேன் என்றும், தவறுகள் செய்யதால், அவர்கள் யாராக இருந்தாலும் விமர்சிப்பேன் எனவும் ஊளையிடுவது எதிர்கட்சியை அண்டிப் பிழைக்கவா??
■ தேசியத் தலைவரின் உடலென அடையாளம் காட்டச் சென்ற போது... "தேசியத் தலைவரே என்றும், பல உயிர்களைக் கொல்ல காரணமானவரின் நிலை இதுவே என்றும்" மகிழ்வுடன் கூறிவிட்டு தற்போது தேசியத் தலைவர் பற்றி நீலிக்கண்ணீர் வடிப்பது ஏன்???
■ தேசியத் தலைவரின் உடல்பற்றி யாருக்குமே தெரியாத ஒரு அடையாளம் தனக்கு மட்டுமே தெரியும் என்றால்... தலைவரின் மனைவி யார்???
சரி தெரியாத அடையாளத்தை விடுவோம், பாடசாலையில் கல்வி கற்ற காலங்களில் கரி மருந்தினைப் பயன்படுத்தி வெடிப்பொருள் ஒன்றினை உருவாக்கும் போது தவறுதலாக வெடித்து தலைவரது காலில் பட்டு எரியுண்டமை யாவரும் அறிந்ததே... பின்னர் எரிந்த காயம் கருமை நிறத்துடன் இருந்தமையால் "கரிகாலன்" என்ற பெயர் வரக் காரணமாக அமைந்தது என்பது அனைவருமே அறிந்த வரலாற்று உண்மையாகும்!
பலரும் அறிந்த அந்தக் கரிய நிறமுடைய கால் அடையாளத்தை ஏன் பலரும் பார்க்கும்படியாக காட்டவில்லை???
■ தலைவரின் உடலெனக் காட்டும்போது ஒட்டுமொத்த தமிழினமே செய்வதறியாமல் கண்ணீர் விட்டு கலங்கிய போது... தமிழர்களின் நலனில் அக்கறை உள்ளவரெனில் அவர்களின் அப்போதைய மனநிலையை உணர்ந்து அடையாளம் காட்டச் செல்லாமல் தவிர்த்து இலங்கை அரசின் முகத்தில் கரியைப் பூசி இருக்கலாமே.??? ஏன் அவ்வாறு செய்யவில்லை.???
அடையாளம் காட்டுவதாகக் காட்டிக் கொடுத்து அவ்வேளையிலேயே தான் ஒரு தமிழனத்தின் துரோகி எனக் காட்டிக் கொள்ளவா.???
■ தாய் மண்ணின் விடிவிற்காக போராடி மடிந்த மாவீரர்களை மதிப்பதாகக் கூறும் கருணா.... இலங்கை அரசோடு ஒட்டிக்கொண்டு இருக்கும் போது "மாவீரர் துயிலும் இல்லங்கள்" இராணுவத்தால் உடைக்கப்படும் போது தடுத்திருக்கலாமே.??? ஏன் தடுக்கவில்லை.???
மாவீரர்கள் மிகவும் தூய்மையானவர்கள் என்பதை கருணா அறியாதவரா???
■ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற பின்பு கொழும்பில் உள்ள யாழ் தமிழர்களிடம் கப்பம் கேட்டு மிரட்டிக் கடத்திய வரலாறுகளையும், பணம் கட்ட வழியற்றவர்களை தடயங்கள் தெரியாமல் கொலைகள் செய்து மறைத்ததையும் கொழும்பில் "வெள்ளை வான்" கடத்தலுக்கு மிகவும் பலம் சேர்த்த பெருமையையும் ஏன் மறைக்க வேண்டும்.???
பல சாட்சிகளின் அடையாளங்களாக கப்பம் கட்டித் தப்பியவர்கள் இன்றும் பல நாடுகளில் இருக்கிறார்கள் என்பதை கருணா மறந்துவிடக் கூடாது!!!
இது போன்ற எண்ணற்ற பல கேள்விகள் உண்டு இடம் போதாமையால் கேள்விகளை இத்துடன் நிறுத்துகின்றேன்.
எதுவாக இருந்தாலும்...
கருணா என்ற ஒற்றைத் துரோகியால் பல உன்னதமான போராளிகள் மற்றும் இவரைச் சார்ந்த உறவுகளும் இன்றுவரையும் சொல்ல முடியாத பல மனவலிகளுடன் தொடர்ந்து... மிகவும் பாதிக்கப்பட்டே வருகின்றனர்.
ஒரு ஊரில் பிறந்து பிரபலமான தனி ஒருவர் தேசத் துரோகம் செய்தால் அவரைச் சார்ந்த உறவுகளைத் தவிர மற்ற அவரது ஊரவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். இது தனியொருவராக வாழ்ந்தவரின் நிலை! ஆனால், கருணாவின் நிலை அவ்வாறு இல்லை!!!
கருணா ஒரு படையணியின் முதன்மைத் தளபதி. புலிகள் அமைப்பை விட்டு பிரியும் போது தான் மட்டும் தனியாக பிரிந்து சென்றிருந்தால்... இன்று இவரது தேசத் துரோகச்செயலால் எந்தவொரு போராளிகளும் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள். கூடவே தனக்கு விசுவாசமான சில சகாக்களை கூட்டிச் சென்றமையாலையே அவர்கள் எந்தப் போராளிகள் எனத் தெரியாத மக்கள் உன்னதமான உண்மைப் போராளிகளையும் "கருணா குழு" என்றே அழைத்து வருகிறார்கள். தாய்மண்ணின் விடிவிற்காக தேசியத் தலைவரின்பால் ஈர்க்கப்பட்டு கருணாவின் கீழிருந்த போராளிகள் பலரது தற்போதைய வாழ்க்கை இன்றுவரையும் மிகவும் சொல்லணத் துயரம் நிறைந்தவையாகவே தொடர்கின்றது!!!
காயப்பட்டு துடித்த போதும், உறுப்புக்களை இழந்த போதும், பட்டினிகள் இருந்து பல வகையான சோதனைகளை அனுபவித்த போதும் இல்லாத மிகக் கொடிய வலி கருணாவின் ஈனத்தனமான செயலாலும் "கருணா குழு" என மற்றவர்கள் மறைமுகமாகத் தாக்கும் போதும் அந்த உன்னதமான தூய்மைப் போராளிகள் அனுபவிக்கும் நரகவேதனையானது... அனைவரது நெஞ்சிலும் இரத்தம் ஒழுகச் செய்யும்!!!
இவ்வாறான காரணங்களால்... இவரது பிரிவிலிருந்த பல போராளிகள் மன உளைச்சலுக்கு ஆளாகி உளவியல் ரீதியாகவும், உடலியல் ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு தள்ளப்படுகிறார்கள். மட்டக்களப்பு என்றவுடன் அங்கு வாழ்கின்ற வலி நிறைந்த மக்களையும், உன்னதமான போராளிகளையும் எந்தவித அறிவுமின்றி கருணா என்ற ஒரு தேசத் துரோகியை எண்ணத்தில் வைத்துக் கொண்டு கொச்சைப்படுத்தி மறைமுகமாக "துரோகிகள்" என விமர்சிப்பவர்கள்தான் உண்மையான தேசத் துரோகிகள் ஆவார்கள்.
காரணம், நாட்டிற்காக களமாடிய போராளிகளையும், அந்தப் போராட்டத்திற்கு பக்க பலமாக இருந்த மக்களையும் விமர்சித்து துரோகப் பட்டம் கொடுப்பவர்களை நாம் வேறு எவ்வாறு அழைக்க முடியும்.?? இவ்வாறான செயல்களும் ஒரு வகையான தேசத் துரோகம்தான்.??
தனது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் போராடி வீரமரணம் அடைந்த மாவீரர் தெய்வங்களை உண்மையிலேயே மதித்து, தாய் மண்ணின் விடிவிற்காக தேசியத் தலைவரை, தலைவராக ஏற்றுக் கொண்டு தனது தலைமையின் கீழ் கடைசி வரை நின்று களமாடிய உன்னதமான போராளிகளை காயப்படுத்தாமல் இருக்க வேண்டும் என கருணா நினைத்தால்...
இனியும் நல்லது செய்ய வேண்டும் என கருணா நினைத்தால்...
இனியும் வாயால் வடை சுட்டு தமிழர்களையும் போராளிகளையும், மாவீரர் தெய்வங்களையும் தேசியத் தலைவரையும் கேவலப்படுத்தாமல் இருக்க வேண்டும் என கருணா நினைத்தால்....
மேற்கூறிய அனைத்துக் காரணங்களையும் கவனத்தில் கொண்டு உண்மையிலேயே கருணா ஒரு ஆண்மகனாக... தமிழ்மகனாக இருந்தால்.... தமிழர்களும் போராளிகளும் இனியும் நிம்மதியாக வாழ தான் செய்த அனைத்துப் பாவங்களுக்கும் பரிகாரம் செய்ய வேண்டும் என கருணா நினைத்தால்...
இனப்படுகொலை செய்த மகிந்தா மற்றும் மகிந்தாவின் பட்டாளங்களை தன் சக்திக்கு முடிந்தவரை கொலை செய்து விட்டு... தப்பி ஓடுவது
அல்லது......
தான் செய்தது... மாபெரும் துரோகம் என்று அறிவித்து தமிழர்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டு தற்கொலை செய்து கொள்வதே, தற்போது கருணாவிற்கு இருக்கும் ஒரே வழி!!!
- வல்வை அகலினியன்
(31.08.2015)
(தற்போது தேர்தல் நெருங்குவதால் இந்தப்பதிவானது காரணத்தோடு மீள் பதிவு செய்யப்படுகிறது)
No comments
Post a Comment