Latest News

July 31, 2020

விடுதலைப் புலிகள் பெயரில் போலி அறிக்கை வெளியிடும் இலங்கைப் புலனாய்வுத்துறை?
by Editor - 0

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு சேறுபூசும் சதித்திட்டம் அம்பலம்

இலங்கைப் புலனாய்வுத்துறையினரால் இயக்கப்படும் போலியான விடுதலைப்புலிகள் அமைப்பின் பெயரால் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு சேறு பூசும் வகையில் அறிக்கை ஒன்றினை வெளியிடவிருந்த சதித்திட்டம் அம்பலமாகியுள்ளது.

தற்போது தமிழர் தாயகத்தில் இடம்பெறவிருக்கும் நாடாழுமன்ற தேர்தலில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பல தரப்புக்கும் பெரும் சவாலாக உருவெடுத்துள்ள நிலையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மீது பெரும் குற்றச்சாட்டை முன் வைத்து புலிகளின் பெயரில் போலியான அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு தேர்தலில் பெரும் பின்னடைவை ஏற்படுத தீட்டப்பட்ட சதித்திட்டம் அம்பலமாகியுள்ளது. இது போன்ற சதித்திட்டங்கள் கடந்த காலத்திலும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டமை இங்கு குறிப்பிட்டதக்கது.

2010 ம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் கூட்டமைப்பின் பத்திரிகை ஒன்று கஜேந்திரன் கோத்தாவுடன் ஒப்பந்தம் செய்தார் என்ற கட்டுக்கதையை முப்பக்க செய்தியாகவும் 2015 ம் ஆண்டு கஜேந்திரகுமார் வெள்ளைக்கொடியுடன் வந்த புலிகளை காட்டிக் கொடுத்தார் என்ற கட்டுக்கதையை முன்பக்க செய்தியாகவும் வெளியிட்டு மக்களை பெரும் குழப்பதினுள் தள்ளி மக்களை தமது பக்கம் சாய நயவஞ்சக திட்டங்களை நிறைவேற்றியது. இம்முறையும் பரப்புரை நிறைவு பெறும் தினத்துக்கு மறு நாள் வெளிநாட்டில் ஒரு அறிக்கையை வெளியிட்டு அதனைக் குடாநாட்டிலிருந்து வெளிவரும் பத்திரிகைகளில் தலைப்பு செய்தியாக வெளியீடு செய்து மக்கள் முன்னணிக்கு உச்சந்தலை அடி ஒன்றினை கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

குடாநாட்டிலிலருந்து வெளிவரும் பத்திரிகைகள் இரண்டும் ஏட்டிக்கு போட்டியாக தமது கையாட்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பும் நோக்குடன் ஊடக தர்மங்களை எல்லாம் குழி தோண்டிப் புதைத்து விட்டு நிர்வாணமாக தமது ஆட்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந் நிலையில் வெளிநாட்டிலிருந்து இத்தகையதொரு அறிக்கை வெளிவருமாக இருந்தால் அது கும்பிட போன தெய்வம் குறுக்க வந்த கதையாகதான் இருக்கும்.

மேற்படி அறிக்கை வெளியாகும் விடயம் தோல்வியடையும் படசத்தில் வேறு ஏதேனும் வழிமுறையை பாவித்து முன்னணி பற்றிய ஒரு பொய்யான கட்டுக்கதை ஒன்று இம்முறையும் இரண்டு பத்திரிகைகளிலும் வெளியாகும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மொட்டந்தலைக்கும் முளங்காலுக்கும் முடிச்சு போட கைதேர்ந்த குடாநாட்டுப்பத்திரிகைகள் இம் முறை என்ன முடிச்சு போட போகிறார்கள் என்பது மக்கள் முன்னணியினருக்கு மட்டுமல்ல அரசியல் ஆர்வலர்கள் அனைவருக்கும் ஒரு புதிராகவே இருக்கும்

« PREV
NEXT »

No comments