யாழில் வேட்ப்பாளராக களமிறங்கியிருக்கும் மணிவண்ணன் என்ற இளம் வேட்ப்பாளரின் ஆதரவாளர்கள் பாடசாலை சுவர் ஒன்றில் அவருடைய பெயரை எழுதியுள்ளார்கள் இதை அறிந்த அந்த வேட்ப்பாளர் அந்த பாடசாலையின் சுவரில் எழுதிய தனது பெயரை அழித்து அந்த சுவரை வர்ணம் தீட்டியுள்ளார் அதே வேலை இது போன்று இனிமேல் நடக்க கூடாது என தந்து ஆதரவாளர்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த நிகழ்வு யாழில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது
Manivannan Visvalingam அவர்களின் பதிவு:-
இன்றைய தினம் பாடசாலை சுவர் ஒன்றில் எனது பெயர் பொறிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகிய நிலையில் குறித்த பாடசாலை சுவர் உடனடியாக எனது பணிப்பின் பேரில் மீண்டும் வர்ணம் தீட்டப்பட்டுவிட்டது. இவ்வாறான செயற்பாடுகள் ஏற்று கொள்ளப்பட முடியாது. எனக்கு ஆதரவு தெரிவிப்பதாக எண்ணும் இளைஞர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என்று தாழ்மையாக வேண்டுகின்றேன்.
No comments
Post a Comment