இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் கட்சியின் உறுப்பினர் என்னும் தகுதியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அத்தோடு யாழ் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் என்னும் பதவியில் இருந்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசிங்கம் தெரிவித்தார்.
கடந்த ஜுன் 28ம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பொன்றின் போது கட்சிக்கும், கட்சி உறுப்பினர்கள் சிலருக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதமான கருத்துக்களை முன்வைத்திருந்தார்.
இது கட்சியின் ஒழுக்கக் கோவை அ(1), ஆ(5) அகிய பிரிவுகளின் அடிப்படையில் அவருக்கான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவரை கட்சியின் அனைத்து பதவிகள் பொறுப்புகளில் இருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் கி.துரைராசிங்கம் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவருக்கு 2020.07.01 திகதியிட்டு கடிதம் பதவுத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டள்ளதுடன், அக்கடிதம் உடன் அவரைச் சேரும் விதமாக வாட்சப் மூலமும் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கி.துரைராசிங்கம் குறிப்பிட்டுள்ளார்
No comments
Post a Comment