Latest News

June 11, 2020

மனதை விட்டகலாத மாமேதை பேராசிரியர் துரைராஜா.மாமனிதர் பேராசிரியர்
by Editor - 0

மனதை விட்டகலாத மாமேதை பேராசிரியர் துரைராஜா.மாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 26 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து, யாழ்ப்பாணச் சராசரி மனிதர்களுடன் ஒன்றிணைந்து வாழ்ந்தவர் பேராசிரியர் துரைராசா.இளமையில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் பாடசாலையில் கல்விகற்று பின் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் கணிதம் கற்று பல்கலைக்கழகத்திற்கு முதல் மாணவனாகத் தெரிவாகி பொறியியல் விஞ்ஞானப் பட்டம் பெற்று பின் பிரித்தானியாவில் கலாநிதிப்பட்டம் பெற்றவர். பேராதனைப் பல்கலைக் கழ கத்தில் விரிவுரையாளராக, பேராசிரியராக, பீடாதிபதியாக சேவையாற்றி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராகப் பணியாற்றிய எமது பேராசிரியரை இத்தினத்தில் நினைவு கூர்வது சாலப் பொருந்தும்.
பேராசிரியர் தாய், தந்தைக்கு நல்ல பிள்ளை, சகோதரர்களுக்கு நல்ல முன் னோடி, தனது குடும்பத்திற்கு நல்ல தலைவன்,தன் பிள்ளைகளுக்கு நல்ல தந்தை. மனைவிக்கு நல்ல கணவன். அவர் குடும்ப வாழ்வு யாழ்ப்பாண கந்த புராண கலாசார வாழ்வுக்கு நல்லதொரு உதாரணம். பெரியோரை மதித்தல், ஆசிரியரை மதித்தல்,சமயவாழ்வில் குடும்ப வாழ்வை ஒன்றிணைத்தல்,தமிழர் கலா சாரத்தில் ஒன்றிப் போதல், கலாசார வாழ்வைத் தனது பெருமையாகக் கொள்ளல், அடுத்து வரும் சந்ததிக்கு தமிழர் வாழ்வியலின் பெருமைகளைக் கைய ளித்தல் போன்றவை அவர் வாழ்வின் இயல்புகளாகும். பேராசிரியர் துரைராஜா யாழ்ப்பாணச் சமூகத்தை வலுவூட்டுவ தற்காக அயராது உழைத்தவர்.தனது பொறியியல் கல்வியை தனது மாணவர் களுக்கு விருப்புடன் கற்பித்தவர்.தமிழ், சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் அவரை நல்ல குருவாக, நல்லாசானாக மதித்து வந்தனர்.
பேராசிரியரின் மாணவன் என்று சொல்வதால் தங்களைத் தாங்களே தர முயர்த்திக் கொண்டவர்கள் பலர். அவர் மாணவர்களின் பெருமைக்குரியவர் என் பதுடன் மட்டும் நின்றுவிடாது மாணவர் களுக்கும் பெருமை சேர்த்தவர். எல்லோ ரையும் அறிவுடையவர்களாகவும் வினைத் திறனுடையவர்களாகவும் உருவாக்க வேண்டும் என்ற அவாவுடன் செயற் பட்டவர். அவரின் கல்விசார் வர லாற்றை அவர் மாணவர்களே உலகெங் கும் பரப்பி நிற்கின்றனர் என்றால் அவர் பெருமையை பறைசாற்ற வேறு யார் வேண்டும்.

தமிழர் வாழ்விடங்களின் அபிவிருத் திக்காக திட்டமிட்டு செயற்பட்டவர். உதாரணமாக பொருளாதாரத் தடையில் அமிழ்ந்து போன யாழ்ப்பாணத்தை மீட்டெடுக்க எல்லா தரத்திலான,எல்லா வகையிலான கல்வியாளர்களையும், தொழில்நுட்பவியலாளர்களையும், தொழி லாளர்களையும், நிர்வாகிகளையும், சிவில் சமூகவியலாளர்களையும் ஒன்றிணைத்து பொருளாதார அபிவிருத்திக்கான எதிர் கால திட்டமிடலை மேற்கொண்டவர். யாழ்ப்பாண மக்கள் பொருளாதாரத் தடை காரணமாக இழந்த வசதிகளை மீண்டும் பெற அவர் அயராது உழைத் தவர். இடர்கால யாழ்ப்பாணத்தவரின் பொருளாதார வாழ்வியலையே தனது வாழ்வியலாகவும் மாற்றிக் கொண்டவர். அதனால்தான் அக்கால வாழ்வில் வடம ராட்சியிலிருந்து சாதாரண மனிதர்கள் சைக்கிளில் வந்தபோது தானும் சைக்கி ளில் யாழ்ப்பாணம் வந்து துணைவேந் தராகப் பணியாற்றியவர். அக்காலத்தில் யாழ்ப்பாணச் சராசரி மனிதர்களின் முறையையே தனது குடும்ப வாழ்க் கையை முறையாகவும் மாற்றிக்கொண் டவர். துணைவேந்தர் பதவிக்கான வசதி களைப் புறந்தள்ளி மக்களில் ஒருவராக தன்னை வரித்துக் கொண்டு வாழ்ந்து காட்டிய பெருமகன்.

தமிழர் நல்ல கல்வியைப் பெற வேண் டும் என்பதற்காக பல்கலைக்கழகக் கல்வி முறையில் தொழிலாளர் கல்வி, வெளிவாரிக் கற்கைகள் போன்றவற்றை அறிமுகப்படுத்தி, யாழ்ப்பாணச் சமூ கத்தை பல்கலைக்கழகம் வரை கொண்டு வந்தவர். வடக்குக் கிழக்குத் தமிழர்க ளில் பெரும்பான்மையோர் விவசாயி களாகவும், மீன்பிடியாளர்களாகவும் இருப்பதால் விவசாயபீடத்தை கிளி நொச்சியில் நிறுவினார். மீன்பிடிக் கற் கைக்கான திட்டங்களைத் தீட்டினார். விவசாய விளைநிலங்களுக்கிடையே விவசாயபீடம் இருப்பது போல எதிர் கால அபிவிருத்திக்கு வன்னிப் பெரு நிலப்பரப்பே மையமானது, பாதுகாப் பானது என்று கருதி பொறியியல் பீடம் ஒன்றை வன்னியில் நிறுவத்திட்ட மிட்டுச் செயற்பட்டவர். இவரின் இம் முயற்சிகள் இடம்,  காலம், தேவையறிந்து செயற்பட்டவர் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டுக்கள்.
ஒடுக்கப்பட்டவர்களிடத்தும், ஏழைகளிடத்தும் மாணவர்கள், ஆசிரியர்கள், நிர்வாகிகளிடத்தும் அன்பும் ஆதரவும், பரிவும், கருணையும் கொணடு விளங்கிய பேராசிரியர் துரைராஜா என்றும் எம் மனதை விட்டகலா மேதையாகவே உள்ளார்.
 
பேராசிரியர் ப.சிவநாதன் தலைவர்,
பொருளியல்துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

-ஈழம் ரஞ்சன்-
« PREV
NEXT »

No comments