Latest News

February 25, 2020

யாழ்ப்பாணத்தில் நேற்று இரவு கைது செய்யப்பட்ட இளைஞர்கள் ஆவா குழுவினர் அல்ல
by admin - 0

யாழ்ப்பாணத்தில் நேற்று இரவு கைது செய்யப்பட்ட இளைஞர்கள் ஆவா குழுவினர் அல்ல எனவும், அவர்கள் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதற்காகவே அங்கு விருந்தினை ஏற்படுத்தியிருந்தாக வலி தெற்கு பிரதேச சபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினரும், ஹர்போல்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான துவாரகன் தெரிவித்துள்ளார்.

யாழ். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்களை அடுத்து, நேற்று இரவு 41 இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இது தொடர்பில் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் ஆவா குழுவினர் என்றும், அவர்களை மடக்கிப் பிடித்ததாகவும் சில இணையத்தளங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.

எனினும், அவ்வாறு இவர்கள் ஆவா குழுவினர் அல்ல என்றும், அவர்கள் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதற்காகவே வந்திருந்தனர் என்றும் தெரிவித்துள்ள அவர், பொய்யான தகவல்களை வெளியிட்ட ஊடகங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments