Latest News

February 03, 2020

கொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..
by admin - 0

வெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது.

சீனாவின் வுஹான் பகுதியில் பரவிய கொரோனா வைரஸ் இதுவரை அந்த நாட்டில் சுமார் 400 பேரை பலி கொண்டுள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கை பல நாடுகளிலும் தீவிரமாகியுள்ளது. கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.

ஒரு பக்கம் சீனா, இந்த நோயை கட்டுப்படுத்த திணறி வரும் நிலையில், அந்த நாட்டிலிருந்து தாய்லாந்து சென்ற 19 பேருக்கு, கொரோனா வைரஸ் அறிகுறி தென்பட்டது.

இதையடுத்து, அவர்களுக்கு தனி வார்டில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

71 வயதாகும் மூதாட்டி ஒருவரும், சீனாவின் வுஹான் பகுதியிலிருந்து தாய்லாந்து திரும்பியவர். அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து அந்த மூதாட்டி முழுமையாக குணமடைந்துவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை அமைச்சகம் வீடியோ வெளியிட்டுள்ளது.

அதுவும், சிகிச்சை ஆரம்பித்த 48 மணி நேரத்தில் மூதாட்டியை கொரோனா வைரஸ் பிடியிலிருந்து காப்பாற்றிவிட்டதாகவும், அவர் தற்போது நலமாக இருப்பதாகவும், வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மூதாட்டி, சிகிச்சையளித்த டாக்டர் மற்றும் நர்சுகளிடம் உரையாடும் காட்சிகள் அதில் உள்ளது.

தாய்லாந்தில் கொரோனா வைரஸ் பாதித்த 8 பேர் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியுள்ளார்கள்.

11 பேருக்கு தொடர் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. ப்ளூ காய்ச்சலுக்கு எதிராக கொடுக்கப்படும் மருந்துகள், ஹெச்ஐவி நோயை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் மருந்துகள் போன்றவற்றை கலந்து கொடுத்து, கொரோனா வைரஸ் நோயை குணப்படுத்தியுள்ளதாக, தாய்லாந்து டாக்டர்கள் தெரிவிக்கிறார்கள்.

தாய்லாந்து டாக்டர்கள் கலந்து கொடுத்த மருந்து விகிதம் பலன் அளித்தால், உண்மையிலேயே அது உலக மக்களுக்கு ஒரு நற்செய்திதான்.

இந்த மருந்து கலவை பற்றி, பல உலக நாடுகளும் அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் உள்ளன.

விரைவிலேயே உலக சுகாதார நிறுவனம், இந்த செய்தி பற்றிய மேலதிக தகவல்களை பெற்று, அதை அனைத்து நாடுகளுக்கும் பகிர்ந்து கொள்ளும் என நம்பப்படுகிறது.
« PREV
NEXT »

No comments