புதுக்குடியிருப்பு பிரதேச சபை உப தவிசாளர் கனக சுந்தரசுவாமி ஜனமே ஜெயந்த் என்பவருக்கு பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் அவருடைய வீட்டிற்கு இன்று சென்ற புதுக்குடியிருப்பு பொலிஸார் பயங்கரவாத தடுப்பு , விசாரணை பிரிவினரின் அழைப்பு தொடர்பிலான தகவலை எழுத்து மூலம் வழங்கியுள்ளனர்.
குறித்த கடிதத்தில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினால் மேற்கொள்ளப்படும் விசாரணை ஒன்றில் வாக்குமூலம் பெறவேண்டி இருப்பதனால் புதுக்குடியிருப்பு பகுதியில் வசிக்கும் ஜனமே ஜெயந்த் என்பவரை 25.10. 2019 திகதி காலை 10 மணிக்கு இரண்டாம் மாடி ,புதிய செயலக கட்டிடம் கொழும்பு__1 எனும் முகவரியில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவு 01 இன் பொறுப்பதிகாரிகளை சந்திக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
Tamilwin
No comments
Post a Comment