ஸ்ரீலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகித்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு மீண்டும் அமைச்சுப் பதவி வழங்கினால், மீண்டும் ஒருமுறை அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரரணை கொண்டுவரப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் பதவிகளை பொறுப்பேற்கவுள்ளதாக நேற்றைய தினம் எடுத்த தீர்மானம் குறித்து கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தொடர் தற்கொலைத்தாக்குதலின் பின்னர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய ரிஷாட் உட்பட சில அமைச்சர்கள் ஆளுநர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு அவர்கள் தமது பதவியை துறக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
அதனடிப்படையில் அவர்களுக்கெதிராக போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன அதன் விளைவாக முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக தமது பதவியை இராஜினாமா செய்தனர். அதன் பின்னர் ஐக்கிய தேசிய கட்சி உட்பட மல்வத்து அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர்கள் அனைவரும் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
எனினும் தம் மீதான குற்றங்களை நிரூபிக்கும் வரை தாம் அமைச்சுப் பதவிகளை ஏற்கப்பபோவதில்லை என தெரிவித்திருந்தனர். எனினும் நேற்றைய தினம் தாம் அனைவரும் மீண்டும் தங்களின் அமைச்சுப்பதவிகளை ஏற்றுக்கொள்ள தீர்மானித்திருப்பதாக தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment