பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று அதிகாலை ஆரம்பமாகி
பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று அதிகாலை 3 மணி அளவில் கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்தில் மடை பரவி பூசைகள் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து அங்கிருந்து மடப்பண்டம் எடுத்து வரப்பட்டு நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கே தமிழர் திருவிழா பொங்கல் உற்சவங்கள் ஆரம்பமாகின.
இந்த நிலையில் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளுக்கு நூற்றுக்கு மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டு பொங்கல் நிகழ்வுகள் சிறப்புற இடம்பெற்றது.
எவ்வாறாயினும் நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவ நிகழ்வுகளை தடுக்கும் வகையில் குறித்த பகுதியில் பொலிஸாரும் பௌத்த பிக்குகளும் பொது மக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment