கல்முனை போராட்டக்காரர்களுக்கும் அரச தரப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனால் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மதகுருமார்கள் நடத்தும் போராட்ட இடத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அமைச்சர் மனோ கணேசன் மற்றும் தயா கமகே ஆகியோர் அங்கு நேரடியாக சென்றிருந்தனர்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் குறித்து பிரதமர் விடுத்துள்ள செய்தி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மதகுருமார்களுக்கு அறிவிக்கப்பட்டது.
எனினும், குறித்த அறிவிப்பு திருப்தியளிக்காத நிலையில், பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது.
அத்துடன் அங்கு குழப்பநிலையும் ஏற்பட்டுள்ளது.
அங்கு குடியிருந்த பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்
No comments
Post a Comment