Latest News

June 28, 2019

இந்தியத்தின் சதியால் மீண்டும் ஓர் தீயின் சங்கமமாய் 1996.03.10 அன்று அலைகடலில் தடம் பதித்த உயிராயுதங்கள்
by admin - 0

தமிழீழ விடுதலைப்போரின் தியாகத்தின் உச்சங்கள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவிற்கும், மனித வாழ்வில் ஓர் வரையறையைத் தாண்டி இப்படியுமா என வியக்கும் வண்ணமும் ஒவ்வொரு போராளியின் வீரமரணத்தின் பின்னும் ஆயிரம் ஆயிரம் வரலாறுகள்….

தேசியத் தலைவரின் அன்பில் திளைத்து உருவான உன்னதர்களின் செயலே தெய்வத்தைவிடவும் பல படி மேலாக தமிழீழத்தின் காவலர்கலாகவே இன்றுவரை பூசிக்கின்றோம். ஒவ்வோர் மகனை, மகளை வீரர்களாய்ப் பார்க்கையிலே பெற்றமனம் சற்று அவ்வீரர் குடியிருந்த கருவறை தொட்டு மெய்சிலிர்த்து பூரிப்படையும் இது தமிழீழத்தின் ஒவ்வோர் தாயின் வரலாகாகவும் இருக்கிறது…..

எம்மினத்தின் விடியலின் போராட்டம் அன்று தொடக்கம் இன்றுவரை தேசம் விட்டு பல கடல் எல்லைகள் தாண்டி விரிந்து சென்றும் எம் தேசத்தை தாங்கியவர்கள் பலர் அதில் பலரது முகமும் தெரியாது, தியாகமும் வெளித் தெரிவதில்லை….

காலம் ஒருநாள் பதிவாக்கும் என்பதில் ஐயமில்லை…..

இந்தியத்தின் சதியால் கடலன்னை மடியில் தமிழீழத்தின் திசையாவும் வேதனையின் குரல்கள் கேட்கும் படியான ஓர் தியாக வேள்வியை நிலைப்பித்தனர் அந்த சர்வதேசக் கடற்பரப்பில்…

இப்படியாக விடுதலைக்கு பலம் சேர்க்கும் பல வழிகளில் அலைகடலில் ஓர் பயணமாகி தேசம் விட்டு பல மைகள் தொலைவாகி கரைகாணாத ஓர் எல்லைக்கு காலக்கடமை இட்டு செல்கிறது.

அப்படியாக ஒரு முறை இரு போராளிகள் கடற்புலிகளின் பாசறைக்கு வருகின்றார்கள்.

காலத்தின் கடமை பல இருப்பினும் அவர்களுக்கு வழங்கப்பட்ட ஓர் கடமைக்கு தம்மை தயார்படுத்த அந்த முகாம் அவர்களை அங்கு உள்வாங்குகிறது. உண்மையில் பொறுப்பாளரையும், போராளிகள் சிலரையும் தவிர வேறு யாருக்கும் அவர்கள் யார் ..? என்ன பிரிவு…? என தெரியாது….!

பின்பு பல தோழமையாளர்கள் அதிகரிக்க உறவுகளும் வளர்ந்தது, அங்கு அவர்கள் இயந்திரப் பொறியியல், மற்றும் பல கடமைகள் சில நாட்கள் சமையலாளராக கடமை செய்தார்கள்.

பின்பு சில நாட்கள் செல்ல அவர்களும் அனைவரும் பிரிவின் துயரில் தவிக்க கடமை மாற்றம் என்று கூறி புன்னகைத்து சென்றார்கள்.

ஆயினும் எங்கு சென்றார்கள் என தெரியாது… ஆயினும் அந்த பாசறையின் மரங்கள், கொட்டில்கள், ஏன் சண்டைப்படகுகள், படகு காவிகள் (டொக்), விளையாட்டு திடல் எங்கும் அவர்களின் நினைவுகள் கலந்து இருந்தது.

அந்த வேதனைகளை என்னால் வார்த்தைகளாலும் கூறமுடியாது…. எழுத்துக்களாலும் வடித்திட முடியாது….

ஆயினும் விடுதலைக் கனவுடன் நீண்ட தூரம் சென்றனர் என்று நாட்கள் ஆக ஆக அலையெறி வந்த வீரர்கள் கூறக்கேட்டோம்.

ஒரு நாள் வானொலியில் ஒலிக்கிறது ஓர் செய்தி…..

“விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகளின் கப்பல் அழித்துவிட்டதாக இந்தியா..”

ஒரு முறை தூக்கி வாரிபோட்டது…
மனம் அது யாரு…?
எத்தனை பேர்…?
என்ன நடந்தது…?
ஏன் இப்படியாக பொய்யாக இருக்கக்கூடாதா என அனைவர் மனதில் எழும் வினா முகத்திலும் தெரிந்தது…

என்னத்தை கதைப்பது வார்த்தைகள் வரவில்லை, பொறுப்பாளரின் கொட்டிலுக்கு ஓடிசென்று வினவினோம்.

என்ன அண்ணா இப்படி ஓர் செய்தி….?

அவர் முகத்திலும் மெளனம்…. அவரின் முக பாவனையும் சற்று நெருங்கிய தோழர்கள் என்பதை ஊகித்தோம்.

பின்பு கேட்டோம் அண்ணா…. கூறுங்கள்.

ஆம்…. அது எங்கட கப்பல் ஒன்………..று இன்று……………

எத்தனை போராளிகள் இருந்தவர்கள் அண்ணா….?

இல்லை அதில் நம்ம……. தோழனும்…. நவ…..நீதனும் தான்….

காரிருள் சூழ்ந்தது போன்று இருந்தது….. பின்பு அந்த கடல் கரையிலிருந்து கடலைப் பார்த்தும், சில போராளிகள் மரத்தின் வேரில் படுத்தபடி வானைப் பார்த்து மெளனமாய் ஆயிரம் ஆயிரம் சோக மொழிகள் ஒவ்வோர் மனதிலும்……

சற்று அந்த வீரர் கரைந்த அலைகடல் நோக்கி……………

அங்கே ஓர் மாலைப் பொழுதில் இந்தியக் கடற்படை வந்து மறித்தது. அது ஓர் சர்வதேசக் கடல் எல்லை அது இந்தியா எல்லையுமில்லை, சிங்கள தேச எல்லையுமில்லை…..

ஆழக்கடல் எங்கு எம் முப்பாட்டன் நாட்டிய கொடியுடன் எம் கரிகாலன் சேனைகள் மக்களின் அத்தியாவசியப் பொருட்களை தாயகம் கொண்டு வந்து சேர்க்க உலகப் பரப்புயாவும் உலாவந்தனர்கள்……

தமிழீழத்திலிருந்து பல ஆயிரம் கடல்மைல் தொலைவிற்கு அப்பால் பாரதத்தின் நயவஞ்சக எண்ணத்துடன் அன்று தன் திமிரோடு வந்து மறித்தது எங்கள் எம்.வி மாரியம்மா கப்பலை ஆயினும் அவர்களின் எண்ணம் போல் அங்கு நடக்கவில்லை அதாவது….

உடனே இந்தியக் கடற்படை எம்.வி மாரியம்மா கப்பலை நோக்கி துப்பாக்கி எச்சரிக்கை வேட்டுக்களை தீர்த்து வெட்டுகளை தீர்த்தது, மிரட்டிப் பார்த்தது ஆயினும் போராளிகள் பணியவுமில்லை. அவன் சொல்லுக்கு இனங்கவுமில்லை….

எமது தலைமைப் பணியகத்துக்கு நிலைமை அறியப்படுத்தப்பட்டது…

பின் இந்தியக் கடற்படை போராளிகளின் கப்பல் என தெரிந்தும் அச்சுறுத்தல் வேட்டுக்களை மேலும் தீர்த்தது. ஆயினும் கப்பல் பயணித்த வண்ணம் தான் இருந்தது….

அனைவர் எதிர்பாராத ஓர் முடிவு எம்.வி மாரியம்மா கப்பலில் அப்போது செய்யப்படுகிறது.

நாங்கள் இவர்களிடம் சரணடைய மாட்டோம். இவர்களுக்கு நாம் யாரு என காட்ட வேண்டும் என முன்வருகின்றனர் அந்த கடற்கரும்புலி மறவர்கள் ஆயினும் கப்பலை தாங்கள் கொண்டு செல்வதாகவும் நீங்கள் தப்பி சென்று மற்றவர்களுடன் இணையுங்கள் என…

ஆயினும் மற்றவர்களால் இந்த முடிவு ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும் அப்போதைய கள சூழலும் காலத்தின் தேவையும் மாறியிருந்ததால் விருப்பமும் இன்றியும் சக தோழர்களையும், அதிலிருந்த பொருட்களையும் பிரிய மனமின்றி போராளிகள் மறு ஆயத்தங்களை செய்தனர்.

காரணம் உயிரிழப்புகள் அதிகரிக்க அந்த கடற்கரும்புலி மறவர்கள் விரும்பவில்லை, நீங்கள் என்னும் பல சாதனைகளை நிலைநாட்ட வென்றும் என கூறி கப்பலில் 2 கரும்புலிகள் தவிர ஏனைய போராளிகள் கப்பலில் இருக்கும் சிறு உதவிப் படகில் ஒரு தொலைத் தொடர்பு சாதனத்துடன் மட்டும் கடலில் இறங்கினார்கள். அது சிறிய படகு என்பதாலும், அலைகளின் எழும்பும் வேகம் அதிகமானதாக இருந்ததாலும் இந்தியக் கடற்படையின் கண்காணிப்புக் கருவியிலும் அது தெரியவில்லை.

உடனே கடற்கரும்புலிகள் மேஜர் நவநீதன், கப்டன் தோழன் முகத்தில் தாம் போராளிகளைக் காப்பாற்றி சந்தோசத்துடன் முகத்தில் புன்னகை மலர விடை கொடுத்து பிரிந்து சென்றார்கள்…

அன்று எம்மிடம் நவநீதன் – தோழனால் அனுப்பப்பட்ட போராளிள பலர் பின்பு அதே கடலில் பல வருடம் கழித்து சாதனை நிலைநாட்டினர். சிலர் இன்று யாவும் மறந்து தன் குடும்பம் தான் முக்கியம் என்று இவர்களை மறந்து தங்கள் வாழ்வை வீணடிப்பதா அதாவது வீணா சாவதா சென்று என கேள்வி எழுப்பி இன்று ஓர் தேசத்தில் வாழ்கின்றனர் இவர்களுக்கு காலம் ஒரு நாள் தீர்ப்பு வழங்கும்….

போராளிகள் இருந்த சிறு படகு வேறு திசைநோக்கி பிரிய மனம் இன்றி அலையில் தாவி தாவி சென்றது. ஆனால் அவர்கள் அனைவரின் மனமும் எதோ குமுறிய வண்ணம் இருந்ததது….

அவர்கள் விழிகள் அந்த கடற்கரும்புலிகள் பயணித்த கப்பலையே பார்த்த வண்ணம் இருந்தது.

கப்பலை திசைதிருப்பி இந்தியக் கடற்படையையும் தம் திசை நோக்கி அழைத்துச் சென்றனர் கரும்புலி மறவர்கள்…..

எதிரியானவனும் கலங்க இங்கே உறவுகள் தவிக்க இதுதான் உறுதியின் வெளிப்பாடு என எழுதி வைத்து ….. அந்த நேரத்தில் சமையல் வாயு எரிகலன் (L.P.G) வாயு கொல்கலன் கொண்டு கப்பலை வெடிக்க வைக்க சிறு தூரத்தில் ஓர் பெரிய வெடியோசையுடன், பெரு வெளிச்சமும் அந்த அலைகடலை சூழ்கிறது.

மற்றப் போராளிகளும் சிறு மணித்தியாலம் கழித்து மற்றைய எம் கப்பல் வந்து மீட்டனர் அப்போது அதில் ஒருவராக அந்தக் கரும்புலி மறவர்களால் அனுப்பப்பட்ட லெப்.கேணல் திருவருள் அண்ணா பின்னாளில் 2007 “எம்.வி. கொசியா” கப்பலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

அவர் அன்று கூறிய வரலாறு இன்றும் என் காதோரம் ஒலிக்கிறது. அவரின் விம்பமும் அந்த எம்.வி மாரியம்மா கப்பலில் காப்பற்றப்பட்ட ஓர் சிலரும் யாவும் மறந்து தனக்காக என்ற வாழ்வை வாழும் போதும் பார்க்கையிலே வேதனைதான் சூழ்கிறது.

என்னதான் மாற்றம் வரினும் வீரர்களின் இலட்சியக் கனவு ஓர்நாள் நனவாகும் தரையிலும் கடலிலும் ஒப்பற்ற வீரர்களின் தியாகங்கள் நீளும் அதிலே ஈழம் பிறக்கும் அன்று அந்த அலைகடல் ஏறி வருவோம் எம் தேசத்தின் வாசலான உம் கல்லறைக் கோவில்களுக்கு…..

நினைவுகளுடன் என்றும் அ.ம.இசைவழுதி (தமிழீழப் பறவை கனடாவில்….)

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"
« PREV
NEXT »

No comments