பிரித்தானிய பாரளுமன்ற உறுப்பினரை சந்தித்து இலங்கை தொடர்பில் கலந்துரையாடிய தமிழ் தகவல் நடுவத்தின் உறுப்பினர்
பிரிட்டன் அரசால் நடைபெறும் இலங்கைக்கான ஆயுத விற்பனையை நிறுத்தக்கோரியும் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்பதனையும் தொடர்ந்து (ஈழத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் சித்திரவதைகளும் விளக்கப்பட்டு இதனை பிரித்தானிய பாராளமன்ற உறுப்பினர்களின் ஆதரவினை திரட்டி வருகின்றனர்
இந்த வகையில்
12.01.2019 அன்று Liverpool தேர்தல் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் Ellman Louise அவர்களுக்கும் தமிழர் தகவல் நடுவத்தின் செயற்பாட்டாளர் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
குறித்த சந்திப்பின்போது ஈழத்தில் இலங்கை அரசினால் தமிழர்களுக்கெதிராக திட்டமிடப்பட்டு கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலை ,தற்போதும் தமிழர் பகுதிகளில் நடைபெற்றுவரும் சிங்கள குடியேற்றங்கள் இதனைவிட முக்கியமாக பிரிட்டனின் இலங்கைக்கான ஆயுத விநியோகம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
மேலும் திட்டமிட்டு நடைபெற்றுவரும் கடத்தல், காணாமல் ஆக்கப்படுதல்,முன்பு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் இன்றய நிலை. முன்னாள் போராளிகளின் தொடர் சிறை, அவர்களின் மர்மமான மரணம் போன்ற பல்வேறுபட்ட அம்சங்கள் கலந்துரையாடப்பட்டது.
இவ்வாறான் செயற்பாடுகள் இலங்கை மீது ஐக்கிய நாடுகள் உரிமைச்சபையினால் கொண்டுவருகின்ற தீர்மானங்கள் நலிவடைந்து செல்லக்கூடிய நிலை ஏற்படும் என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் உடனடியாக நிறுத்துவதற்கான அழுத்தத்தை பிரித்தானிய அரசுக்கு வழங்க வேண்டும் என்பதும் வலியுறுத்ப்பட்டது
ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடித்த இச்சந்திப்பில் தமிழ் தகவல் நடுவத்தின் முன்னணி செயற்பாட்டாளரும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுமான
சிவகுரு சஜூபன் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் நவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருந்தார்.
No comments
Post a Comment