மாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட்
உலக தமிழர் வரலாற்று மையம் ஒக்ஸ்போட் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வானது காலையில் ஆரம்பமாகி எழுச்சி கீதங்களும் எழுச்சி உரைகளும் நிகழ்த்தப்பட்டு சமகாலத்தில் வீரகாவியமான மாவீரர்களுக்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டது இதனை உலக தமிழர் வரலாற்று மையம், பிரித்தானியா அவர்களினால் ஏற்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கது
மேற்படி நிகழ்வின் முக்கிய அங்கமான ஈகைச்சுடரினை பிரித்தானிய நேரம் மாலை 12.30 மணி அளவில் மணி ஒலிக்க இசைபரியாவின் தாய் அவர்கள் ஈகச்சுடரேற்றி மாவீரர் கீதம் ஒலிக்கப்பட்டது வீரகாவியமான மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது
இதன்போது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள் அமைச்சினால் பிரித்தானியாவில் முன்னெடுக்கப்படுகின்ற இலங்கை அரசாங்கத்தினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த பிரித்தானிய பாராளுமன்றம் தீர்மானம் நிறைவேற்ற மக்களின் ஆதரவினை கோரி கையெழுத்து திரட்டி வருகின்றது. அந்தவகையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்
சிவகுரு சஜூபன்,இளவரசன் ஜெயபாலன்,பிரான்சிஸ் வசந்தராஜன், சிவஞானம் ஜெகநாதன், டிறோஷன் அவர்கள் தலைமையில் மேற்படி திட்டமும் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment