பிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் சொக்கலிங்கம் யோகலிங்கம் உட்பட அதன் செயற்பாட்டாளர்கள் மூவர் பிரித்தானிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை உயர்ஸ்தானிகர் ஒருவர் வேண்டுமென்றே வழங்கிய தவறான தகவலின் அடிப்படையிலேயே பிரித்தானிய பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லண்டன் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்றியுள்ளார்.இதனை எதிர்த்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் ஒக்ஸ்போர்ட் யூனியனுக்கு முன்னாள் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழீழ தேசியக் கொடியினை ஏந்தியபடி' தமிழின படுகொலை சிங்கள பிரதமரே வெளியேறு' என்றவாறு கோசமெழுப்பியுள்ளனர்.
இதேவேளை அங்கு வந்திருந்த இலங்கை உயர்ஸ்தானிகர் ஒருவர் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கு பாயங்கரவாதிகளின் கொடியினை ஏந்தியுள்ளார்கள் என வேண்டுமென்ற தவறான தகவலை வழங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து பிரித்தானிய பொலிஸாரும் தேசிய கொடிகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தவர்களை அடாவடியாக கைது செய்துள்ளனர்.
No comments
Post a Comment