Latest News

September 11, 2018

நீதி கோரி கனகராயன் குளத்தில் போராட்டம்!
by admin - 0

வன்னியின் கனகராயன் குளத்தில் சிறீலங்கா பொலிசாரால் மிசேச்சத்தனமாக பாடசாலை மாணவி மற்றும் மாணவன் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. தாக்கப்பட்ட 14 வயது மாணவி தீவிர சிகிச்சைப் பிரிவில்,சிகிச்சை பெற்றுவருகின்ற நிலையில் நீதி வேண்டி இன்று செவ்வாய் காலை அவர் கல்வி கற்கும் பாடசாலை முன்னதாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

வவுனியா வடக்கு கனகராயன்குளம் பகுதியில், கனகராயன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிவில் உடையில் தம்மை தாக்கியதாக தெரிவித்து 14 வயது மாணவி உட்பட ஓரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள்,ஆசிரியர்கள்,ஊர் மக்கள் எனப்பலரும் அணிதிரண்டு தமது கோசங்களை எழுப்பியிருந்தனர்.
இதனிடையே அச்சங்காரணமாக பெருமளவு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்
« PREV
NEXT »

No comments