காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி 500ஆவது நாளாக கிளிநொச்சியில் தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் பிரித்தானிய பிரதமர் இல்லத்திற்கு முன்பாக நேற்று நடைபெற்றுள்ளது.
பிரித்தானியாவில் உள்ள அனைத்து பல்கலைக்கழக தமிழ் மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த போராட்டத்திற்கு அனைத்து தமிழ் அமைப்புக்களும் ஆதரவு வழங்கியிருந்தன.
போராட்டத்தில் கலந்து கொண்ட இரட்ணவேல் பிரசன்னா என்பவர் இதன்போது கருத்து தெரிவிக்கையில்,இறுதி யுத்தத்தின் கடைசி நாட்களில் இலங்கை இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட தமது அன்பானவர்களுக்கான பதில் வேண்டி 500ஆவது நாளாக கிளிநொச்சியில் உறவுகள் போராடி வருகிறார்கள்.
ஆனால் பதிலளிக்க வேண்டிய நல்லாட்சி அரசோ, சர்வதேசமோ எந்த பதிலும் வழங்காமல் மௌனிகளாக இருக்கிறார்கள்.இந்தவேளையில் உலகெங்கும் பரந்து வாழும் ஈழத் தமிழர்களாகிய நாம் அவர்களின் தோளோடு தோள் நிற்பது தார்மீகக் கடமையாகும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அண்மையில் ஐ.நாவினால், உலகின் முக்கியமான உடனடியாக கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய விடயங்களின் பட்டியலில் இலங்கையில் காணாமலாக்கப்பட்டோர் சம்பந்தமான விடயமும் உள்ளடக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.http://feeds.feedburner.com/vivasaayi/QMzm
No comments
Post a Comment