முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட பூதன்வயல் கிராமத்தில் தண்ணிமுறிப்பு பாடசாலை இயங்கிய காணியை தனியார் ஒருவர் அடாத்தாக பிடித்து வைத்திருப்பதால் குறித்த காணியை மீட்டுத்தரக்கோரி இன்று(3) கவனயீர்ப்பு போராட்த்தில் ஈடுபட்டனர்யுத்த காலத்துக்கு முன்னர் நீண்டகாலமாக பாடசாலை இயங்கிவந்த காணியை யுத்தம் நிறைவடைந்து மீள்குடியேற்றம் வந்தபோது தனியார் ஒருவர் இந்த பாடசாலை காணியினை சுபீகரித்து பாடசாலை அடையாளங்களை அழித்து வீடு ஒன்றை அமைத்தார்
அப்போதைய அரசியல் சூழல் காரணமாக நாம் போராடி இந்த காணியை பெற்ருக்கொள்ளமுடியவில்லை பின்னர் உரிய முறைப்படி பிரதேச செயலக அதிகாரிகளை அணுகி அவர்கள் ஊடாகவும் குறித்த தனிநபரை வெளியேற்ற முடியாத நிலையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்பட்டு அது அரசகாணி என தீர்ப்பு வழங்கப்பட்டு பின்னர் பிரதேச செயலகம் ஊடாக உரியமுறைப்படி பாடசாலைக்கு என வழங்கப்பட்டது
இருப்பினும் குறித்த காணியை அடாத்தாக பிடித்த தனிநபர் மேல் முறையீடு செய்ததன் விளைவாக வழக்கு முடியாமல் காணிக்குள் மீண்டும் செல்லமுடியாத நிலை உள்ளது தமது பிள்ளைகள் பொதுநோக்கு மண்டபத்தில் எந்தவித வசதிகளுமற்ற நிலையில் கல்வி கற்று வருகின்றனர் எனவே உடனடியாக இந்தவிடயத்துக்கு தீர்வு பெற்றுத்தருமாறு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
குறித்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தரஜா மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் து ரவிகரன் ஆகியோர் கலந்துகொண்டு இந்தவிடயம் தொடர்பில் கூடிய கவனமெடுத்து மிகவிரைவில் இந்த பிரச்சனைக்கு தீர்வு பெற்று தருவதாக உறுதியளித்ததை தொடர்ந்து ஆர்ப்பாட்ட காரர்கள் கலைந்து சென்றனர்
No comments
Post a Comment