யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், நீராவியடியை வதிவிடமாகவும் கொண்ட நாகராசா சுப்பிரமணியம் அவர்கள் 02-05-2018 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகராசா(சரவணை) செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற கனகசபை, இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கம்மா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சசிகலாதேவி(கௌசலா- ஜெர்மனி), சசிதரன்(உதயன்- டென்மார்க்), கேதீஸ்வரன்(ஈசன்- பானுஜா பான்சி யாழ்ப்பாணம்), மேனகா(பிரான்ஸ்), ரேணுகா(உஷா- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சோமசுந்தரம், கனகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுகுமாறன், செல்வமலர், ஆனத்தி (விஜி),தேனழகன், குலச்செல்வன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, விநாயகமூர்த்தி, கனகம்மா மற்றும் கந்தசாமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற இலிங்கப்பிள்ளை, இரத்தினபூபதி ஆகியோரின் அன்புச் சகலனும்,
சகிமளா, தயாளன், சஞ்சியா, மதுஷன், லகிஷன், சாருகா, கீர்த்திகன், பானுஜா, சுயோ, சுவேதா, சுருதி, உபாஷனா, வேணிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
No comments
Post a Comment