இந்த நூற்றாண்டில் நிகழ்த்தப்பட்ட மிலேச்சத்தனமான தமிழ் இனப்படுகொலையின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 18.05.2018 பிரித்தானியாவில் இன்று இடம்பெற்றது.
பிரித்தானியப் பிரதமர் அலுவலகத்திற்கு வெளியே தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வில் பெருந்திரளான மக்கள் பங்கேற்று இலங்கைப் படையினரால் இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் திரு செல்வா அவர்களால் தமிழீழத் தேசியக் கொடியேற்றப்பட்டு ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து திரண்டிருந்த மக்கள் ஒவ்வொருவராக பிரத்தியேக அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர் எட் டேவி அவர்கள் கலந்து கொண்டு முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் தமிழனப் படுகொலைக்கான பொறுப்புக்கூறலில் இலங்கை அரசாங்கம் தவறிவிட்டது என்பதையும் சர்வதேச அழத்தங்களூடாகவும் ஐக்கிய நாடுகள் சபையூடாகவும் தமிழினப்படுகொலைக்கான நீதிக்கு தான் தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றும் கூறினார்.
அதைத் தொடர்ந்து தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் அரசியல்த்துறையைச் சேர்ந்த சதா அவர்களினால் தமிழினம் இன்று எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் அதை நாம் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் மிகவும் ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.
இறுதியாக நியூட்டன் அவர்களின் உரையைத் தொடர்ந்துதமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாயக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவெய்தியது.
No comments
Post a Comment