ஆனந்த சுதாகரனுக்காக லண்டனில் வீதிக்கு இறங்கிய தமிழர்.
இலங்கை அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பிரித்தானியாவில் நேற்று (01.4.2018) மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
அண்மையில் பெரும் சோக அதிர்வலையை ஏற்படுத்தியிருந்த அரசியல் ஆயுட் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தியும் ஒட்டுமொத்த தமிழ் அரசில் கைதிகளின் விடுதலையை கோரியும் பிரித்தானிய பிரதமர் வாசல்ஸ்தலத்திற்கு முன்னால் திரண்ட புலம்பெயர் தமிழர், அவர்களின் விடுதலையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களையும் காணமால் ஆக்கப்பட்டவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய பிரித்தானிய அரசு இலங்கைக்கு அழுத்தங்கங்களை கொடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
No comments
Post a Comment