Latest News

March 10, 2018

தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறை செயலர் {தமிழீழ நிதிப் பொறுப்பாளர்} பிரிகேடியர் தமிழேந்தி அவர்களின் 09ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by admin - 0

தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறை செயலர் {தமிழீழ நிதிப் பொறுப்பாளர்} பிரிகேடியர் தமிழேந்தி அவர்களின் 09ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.



பிரிகேடியர் தமிழேந்தி தமிழீழ நிதிப் பொறுப்பாளர் (சபாரத்தினம் செல்லத்துரை), யாழ் மாவட்டம்,(15.02.1950 – 10.03.2009) தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக தன்னை முழுமையாக அர்ப்பணித்து தனது தனித்துவமான திறமையால் நிதித்துறையை திறம்பட செயலாற்றி தேசியத் தலைவர் அவர்களிலும் போராளிகளிலும் நன் மதிப்புபெற்றிருந்தவர்.10.03.2009 அன்று சிறீலங்கா ஆக்கிரமிப்பு படையின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சவடைந்தார்.

தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் தொடக்க காலத்தில் இருந்து விடுதலைக்காக உழைத்து அனைவராலும் தமிழேந்தி அப்பா என அழைக்கப்படும் பிரிகேடியர் தமிழேந்தி தமிழீழ விடுதலைப்புலிகளின் நிதிப்பிரிவு பொறுப்பாளராக செயற்பட்டு விடுதலைப்போராட்டத்திற்காக தாயகத்திலும் புலம்பெயர்நாடுகளிலும் நிதியினை பெற்றுக்கொள்ளும் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டார். தாயகத்தில் பால்வேறு துறைகளை உருவாக்கி ஒருநாட்டின் அராசங்கத்தின் வருமானங்கள் எவ்வழிகளில் பெற்றுக்கொள்ளலாமோ அவ்வாறு பலவழிகளில் பெற்றுக்கொள்வதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டார்.

இதற்காக பல பிரிவுகளை உருவாக்கி பண்ணைகளை உருவாக்கி, தொழில்சாலைகளை உருவாக்கி மற்றும் விவசாய செய்கையினை மேற்கொண்டு விடுதலைப்போராட்டத்திற்காக வருமானங்களை ஈட்டிக்கொண்டிருந்தார்.



மற்றும் விடுதலைப்புலிகளின் கட்டமைப்பின் தளஅமைப்பு வேலைகள் உள்ளிட்ட கட்டுமான வேலைகள் அனைத்தினையும் ஒழுங்குபடுத்தி மேற்கொண்டார். சமாதான காலப்பகுதியில் தமிழ் மொழியில் பற்றுக்கொண்டு அனைத்து நிர்வாக கட்டமைப்புக்களிலும் தமிழ் பெயர்சூட்டி தமிழினை வளர்க்க பெரும்பாடுபட்டார்.

பல போராளிகளுக்கு தமிழ் மொழி ஊடாக பல திட்டங்களையும் தமிழின் வரலாற்றினையும் கற்றுக்கொள்ள பல முனைப்புக்களுடன் செயற்பாட்டார். தாயகத்தில் போர் உக்கிரம்பெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களினால் தமிழீழ விடுதலைப்புலிகளின் படைத்துறை செயலாளராக மாற்றம் பெற்று விடுதலைப்போராட்டத்திற்கான அடுத்தகட்ட பணியினை மேற்கொண்டார்.இந்த காலகட்டப்பகுதியில் களத்தில் நிற்க்கும் போராளிகளையும் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டமைப்பினையும் சீர்செய்து போராளிகளின் செயற்பாட்டினை கண்டு படைத்துறை ரீதியிலான பல வளர்ச்சிகளுக்கு தமிழீழ தேசியத்தலைவர் அருகில் இருந்து செயற்பட்டுக்கொண்டிருந்தார்.இன்நிலையில் சிறீலங்காப்படையினரின் போர் உக்கிரம் பெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் 10.03.2009 அன்று புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் சிறீலங்காப்படையினரின் எறிகணைத் தாக்குதலில் வீரவரலாறானார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக தன்னை முழுமையாக அர்ப்பணித்து தனது தனித்துவமான திறமையால் நிதித்துறையை திறம்பட செயலாற்றி தேசியத் தலைவர் அவர்களிலும் போராளிகளிலும் நன் மதிப்பு பெற்றிருந்தவர்.

நன்றி

-ஈழம் ரஞ்சன்-
****************************************************
எங்கள் இனத்தை மண்ணில் 
புதைத்தீர்..
எங்கள் தாய் மொழியை எங்கு 
புதைப்பீர் சிங்களமே...??
என சவால்கள் நிரம்பிய 
மிடுக்கோடு தனக்கென மணமாலை
விரும்பாத தாயகத்தை காதல் செய்த
ரஞ்சித்தப்பாவின் ஒன்பதாம் ஆண்டு 
நினைவு நாள் இன்றாகும் !

பாரதிக்கு பின் தமிழுக்கு 
தமிழீழத்தில் முன்னுரிமை 
கொடுத்து தமிழே எங்கள் 
சொத்தென இடம்,பொருள்,பெயர் 
என எல்லாவற்றிற்கும் சின்னம்
சூட்டிய பெருமை எங்கள் இந்த
வீரத்தமிழனான இப் பெரியவரையே சாரும்..
தாயகத்தில் தமிழ் மொழி சார்ந்தே எல்லாம் 
இருக்க வேண்டும் என
தலைவனின் சிந்தனைக்கேற்ப 
செயல் வடிவம் கொடுத்த தமிழீழத்தின் சிந்தனையாளரான(தமிழேந்தி அப்பா) அவர்களை 
இந்நாளில் மறந்திட முடியாது !

14.1.2006 அன்று தமிழீழத்தில் தமிழ்மொழி காப்புத்திட்ட குழு ஒன்றை உருவாக்கி முதல் கட்டமாக 13 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு இந்த குழுவின் முதல் கட்ட செயல்பாடாக பத்தாயிரம் பேருக்கு பெயர் சூட்டும் நிகழ்வும் எமது வருடப்பிறப்பு தை முதல் நாள் என்பதையும் பிரகடணப்படுத்தியும்,தமிழ் மொழி கல்லூரி (கிளிநொச்சி அறிவியல் நகர்) எனும் இடத்தில் உருவாக்கி தமிழ் மொழி ஆசிரியர்களையும் உருவாக்கினார்.

ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட பெயர்களை உடைய கையேடு ஒன்றினையும் வெளியிட்டு அவ் வெளியீட்டு பேளையை வைத்தியசாலைகளுக்கு இலவசமாகவும் வழங்கி தமிழ் மொழியில் பெயர் சூட்டிய குழந்தைகளுக்கு தமிழீழ வைப்பக கணக்கொன்றினை ஆரம்பித்து ஒவ்வொரு குழந்தைக்கும் தலா 1000 ரூபா வீதம் வைப்பு செய்து மழலைகள் வைப்பு கணக்கு புத்தகமும் வழங்கியதும் பெருமைப்பட வேண்டிய விடயமாகும்.

எம் இனம் விடுதலை பெற முன் எம்முடைய மொழி விடுபட்டு போய் விடக்கூடாது என்பதற்காக பாரிய அளவில் வேலைப்பழு இருந்தாலும் எம் மொழிக்காக உழைத்த வீர புலி வேந்தனும் மூத்தவரும் இவரே !

ஒவ்வொரு போராளியின் வளர்ச்சியிலும் 
சரி தமிழீழத்தின் கட்டுமானத்தை(நிதிக்கு)அத்திவாரம் இட்டு கால தேவைக்கேற்ப நிர்ணயிக்கும் பெரும்"காசாளன்" என தாயகத்தில் தேரோட்டிய இப் புலி வீரனுக்கு வீர வணக்கங்கள் !

-மார்ஷல் வன்னி-
« PREV
NEXT »

No comments