தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்
வட்டு. அலுவலகத்தில் கலந்துரையாடல்
-வெற்றியாளர்கள், வேட்பாளர்கள் பங்கேற்பு-
நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வலி.மேற்கு பிரதேச சபைக்குப் போட்டியிட்ட தமிழ்த் தேசியப் பேரவை (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்) வேட்பாளர்களுடனான முதலாவது சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை காலை கட்சியின் வட்டுக்கோட்டை அலுவலகத்தில் நடைபெற்றது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சிரேஸ்ட உறுப்பினரும் கட்சியின் வட்டுக்கோட்டை பொறுப்பாளருமான சட்டத்தரணி கே.சுகாஸ் தலைமையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
தேர்தலில் வெற்றியீட்டிய வேட்பாளர்கள் மூவர் உட்பட போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் இதில் கலந்துகொண்டனர். கட்சிக்கு கிடைத்த மூன்று விகிதாசார உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பாக இதில் கலந்துரையாடப்பட்டு முடிவுகளும் எடுக்கப்பட்டன.
வெற்றிபெற்ற மற்றும் வெற்றிபெறத் தவறிய வேட்பாளர்களின் எதிர்காலச் செயற்றிட்டங்கள் தொடர்பாகவும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இதில், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் நீண்டகாலச் செயற்பாட்டாளர் சூட்டி அண்ணா மற்றும் சட்டத்தரணி அருச்சுனா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
No comments
Post a Comment